ஜேம்ஸ் பேக்கர் இலங்கையில் கசினோ தொடங்குவதில் சட்டச் சிக்கல்
Wednesday, August 27, 20140 comments
அவுஸ்திரேலியாவின் கசினோ வர்த்தகரான ஜேம்ஸ் பேக்கரின் கிரவுண் லிமிட்டட் நிறுவனம் இலங்கையில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள 400 மில்லியன் டொலர் முதலீட்டிலான ஹொட்டல் மற்றும் கசினோ ரிசோர்ட் ஆகியன தொடர்பில் குறிப்பிடப்படாத சட்ட சிக்கல் காரணமாக புதிய தாமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த செல்வந்தர்களில் ஒருவரான ஜேம்ஸ் பேக்கர், சுமார் ஒருவருடத்திற்கு முன்னர் தனது திட்டத்திற்கான அனுமதியை இலங்கை அமைச்சரவையில் பெற்றிருந்தார்.
எனினும் சில பௌத்த மத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் வலுவான எதிர்ப்பு காரணமாக ஏற்பட்ட மாற்றங்களால், இந்த நிர்மாணப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
நாட்டின் சட்ட பக்கத்தில் இருந்து வெளியில் குறித்த முதலீட்டு திட்டத்திற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் எவ்வாறு அது மேற்கொள்ளப்பட போகிறது என்பதை அவர் தெளிவாக கூறவில்லை.
நிலத்திற்கு தேவையான கட்டண முறையில், எமது பக்கத்தில் சில சட்ட சிக்கல்கள் இருந்தன. நிர்மாணப் பணிகளை ஆரம்பது தொடர்பில் சில பிரச்சினைகள் இருப்பது குறித்து அவர்களுக்கு அறிவித்துள்ளோம். அதனை ஆரம்பிக்க இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கசினோ சூதாட்டம் இன்றிய ஹொட்டல் அபிவிருத்தித் திட்டத்திற்கு இலங்கை பாராளுமன்றம் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், உள்நாட்டு அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி உள்நாட்டு பங்காளியுடன் கிரவுண் நிறுவனம் கசினோ சூதாட்ட ஆரம்பித்தால், அதனை தாம் எதிர்க்க போவதில்லை என அரசாங்கம் கூறியிருந்தது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment