நுவரெலியா ஜும்ஆ பள்ளிவாசலின்மீது மதில் சுவரொன்று இடிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் படுகாயங்களுக்குள்ளாகி நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இப் பள்ளிவாசலுக்கருகில் இருந்த கடையின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் சேதமடைந்த கடையில் தொழில் புரியும் ஊழியர் எனவும் மற்றவர் பள்ளிவாசலில் தொழில் புரிந்துகொண்டிருந்தவரெனவும் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற நுவரெவியா மாநகர முதல்வர் மகிந்த தொடகம்பே கமகே மற்றும் பள்ளி வாசலின் நிர்வாகிகள் நிலைமையினை பார்வையிட்டதுடன் புனரமைப்பை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment