தேசிய ஷூறா சபையின் முக்கியமான தீர்­மானங்கள்

Friday, August 29, 20140 comments


தேசிய ஷூறா சபை தலைவர் தாரிக் மஹ்மூதின் தலை­மையில் 2014 ஆகஸ்ட் 17 அன்று நடை­பெற்ற அதன் பொதுச் சபைக் கூட்­டத்தில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் வருமாறு,

 தேசிய மட்­டத்­தி­லாக முஸ்லிம் அமைப்­புக்கள், துறை சார் நிபு­ணர்கள், கல்­வி­மான்கள் மற்றும் சமூக ஆர்­வ­ளர்­களை உள்­ள­டக்­கிய ஒரு ஆலோ­சனை சபை­யா­கிய தேசிய ஷூறா சபையின் 2014 ஆகஸ்ட் 17ஆம் திகதி நடை­பெற்ற பொதுச் சபைக் கூட்­டத்தில், பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் கொடூரத் தாக்­குதல் கார­ண­மாகப் பாதிக்­கப்­பட்ட பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஒரு மில்­லியன் ஐக்­கிய அமெ­ரிக்க டொலர்­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­ய­மைக்­காக  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அவர்­க­ளுக்கும், இலங்கை அர­சாங்­கத்­துக்கும் நன்றி தெரி­வித்து அதனை வர­வேற்கும் வகை­யி­லான ஒரு தீர்­மானம் ஏக­மா­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

அதே­வேளை, பலஸ்­தீனில் 402 சிறு­வர்கள், 249 பெண்கள் மற்றும் 74 முதி­ய­வர்­களை உள்­ளிட்ட பொது­மக்­களைப் படு­கொலை செய்­த­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து உட­ன­டி­யாக இஸ்­ரே­லு­ட­னான இலங்­கையின் இரா­ஜ­தந்­திர உற­வு­களை இரத்­துச்­செய்­து­கொள்­ளு­மாறும்,  சர்­வ­தேச சமூ­கத்தில் ஒரு முழு­மை­யான உறுப்­பு­ரிமை நாடாக பலஸ்தீன் அரசு செய­லாற்றும் வரை எவ்­வ­கை­யான தொடர்­பு­க­ளையும் வலுப்­ப­டுத்த வேண்டாம் என்றும் தேசிய ஷூறா சபை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்திக் கேட்­டுக்­கொள்­கின்­றது.

வர­லாற்றுக் காலம் தொடக்கம், முஸ்­லிம்­களும், கிறிஸ்­த­வர்­களும், யூதர்­களும் அமை­தி­யா­கவும், ஒற்­று­மை­யு­டனும் வாழ்ந்­து­வந்த பல மதங்­களைக் கொண்ட அன்­றைய பலஸ்தீன், அம்­மக்­களின் எவ்­வித ஆணையும், விருப்பும் இன்றி ஐக்­கிய நாடுகள் சபை­யினால் ஒரே இரவில் பிரத்­தி­யே­க­மாக யூதர்­களை மட்டும் கொண்ட  ஒரு நாடாக இஸ்ரேல் உரு­வாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இன்­று­வரை சுமார் 67 வரு­டங்­க­ளுக்கும் மேலாக பலஸ்­தீன அரசை மீண்டும் முழு­மை­யான ஒரு தனி­நா­டாக இயங்­க­வைப்­பதில் ஐக்­கிய நாடுகள் சபை தவ­றி­ய­தை­யிட்டு தேசிய ஷூறா சபை ஐக்­கிய நாடுகள் சபையை வன்­மை­யா­கக்­கண்­டிக்­கின்­றது.

மேலும், அண்­மைக்­கால இஸ்­ரேலின் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தலைக் கண்­டித்து ஆகஸ்ட் 13 ஆம் திகதி இலங்கை தௌஹீத் ஜமா­அத்­தினர் (SLTJ) ஒழுங்­கு­செய்த அமை­தி­யான எதிர்ப்பு ஊர்­வ­லத்தைச் சீர்­கு­லைத்து, ஊர்­வ­லத்­துக்கு குந்­தகம் விளை­வித்து வன்­மு­றையை ஏற்­ப­டுத்த பொது பல சேனா (BBS)  மேற்­கொண்ட பய­ன­ளிக்­காத அச்­சு­றுத்தல் முயற்­சியை தேசிய ஷூறா சபை கண்­ட­னத்­துடன் வெறுக்­கின்­றது.

 ‘நியூ யோர்க் டைம்ஸ்’ அதி­கூ­டிய விற்­பனை சாதனை படைத்த ‘By Way of Deception’ என்னும் முன்னாள் இஸ்­ரே­லிய மொசாட் உல­வாளி விக்டர் ஒஸ்ட்­றௌவ்ஸ்கி (Victor Ostrovsky) என்­ப­வரின் நூலில் இஸ்ரேல் LTTE இயக்­கத்­துக்கு ஆயு­தங்­க­ளையும், வெடி­ம­ருந்­து­க­ளையும் வழங்­கி­ய­தாகக் கூறி­யதைப் புறக்­க­ணித்து, இலங்­கையின் போர் முயற்­சி­களில் இஸ்ரேல் ஆத­ர­வ­ளித்த்­தாக ஆகஸ்ட் 12ஆம் திகதி நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டில் பொது பல சேனா கூறிய விட­யத்தை தேசிய ஷூறா சபை உண்­ணிப்­பாக அவ­தா­னித்­தது.
LTTE யின­ருக்கு இஸ்ரேல் வழங்­கிய பயிற்­சியும், ஆயு­தங்­களும் தான் 1987ஆம் ஆண்டு ஜூன் 02ஆம் திகதி அரந்­த­லாவ எனும் இடத்தில் 31 பௌத்த பிக்­கு­களின் படு­கொ­லைக்கு வழி­வ­குத்­த­தையும், இஸ்ரேல் மற்றும் நோர்­வேயில் உள்ள LTTE இயக்­கத்­துக்கு ஆத­ர­வான குழுக்­க­ளுடன் கொண்­டி­ருக்கும் சர்ச்­சைக்­கு­ரிய தொடர்­பு­க­ளையும் மறந்து அதிர்ச்­சி­யூட்டும் வகையில் இஸ்­ரேலின் புகழ்­பாடும் பொது பல சேனாவை தேசிய ஷூறா சபை கண்­டிக்­கின்­றது.

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி LTTE இயக்­கத்­துக்­கெ­தி­ரான போரின் இறுதித் தினத்­தன்று, ஐநா சபையின் உலக சுகா­தார தாப­னத்தின் கூட்­டத்தில் அதன் நிறை­வேற்றுக் குழுவின் தலை­வ­ராக அப்­போ­தைய சுகா­தார அமைச்சர் நிமல் சிறி­பால த சில்வா அவர்கள் தெரி­வா­னதை எதிர்த்து வெற்­றி­ய­ளிக்­காத ஒரு முயற்­சியை மேற்­கொண்டு இலங்கை மீதும் அதன் இரா­ணுவப் படைகள் மீதும் சர்­வ­தேச குற்­ற­வியல் விசா­ரணை மேற்­கொள்­ளப்­படல் வேண்டும் என இலங்­கைக்கு எதி­ராக முத­லாது அபாய அச்­சு­றுத்தல் விடுத்து இலங்­கையைப் பற்றி விசா­ரிப்­ப­தற்கு ஐ.நா. மற்றும் உலக சுகா­தார தாப­னத்தின் இணைந்த குழு­வொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என கோரிய முத­லா­வது நாடு இஸ்ரேல் என்­ப­த­னையும் தேசிய ஷூறா சபை இந்த சந்­தர்ப்­பத்தில் நினைவு கூரு­கின்­றது.

போர் முடி­வ­டைந்து ஒரு வாரத்­தினுள், 2009 மே 26 மற்றும் 27ஆம் திக­தி­களில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை பற்­றிய விஷேட கூட்­டத்­தொ­டரில், அப்­போ­தைய மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் ஒரு உறுப்­பி­ன­ராக இஸ்ரேல் இல்­லா­வி­டினும், விஷேட நேரத்தைக் கேட்டு ஒதுக்கி போரின் இறுதிக் கட்­டத்தில் எமது இரா­ணுவப் படை­களால் இழைத்­த­தாகக் கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் பற்றி விசா­ரிப்­ப­தற்கு சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி, இலங்­கைக்கு எதி­ரான ஐரோப்­பிய யூனி­யனின் அனு­ச­ர­ணை­யி­லான தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வ­ளித்து மீண்டும் ஒரு முறை இலங்­கைக்கு எதி­ராகச் செயற்­பட்­டதை தேசிய ஷூறா சபை மேலும் நினைவு கூர்­வ­துடன், எவ்­வித தயக்­கமும் இன்றி இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வ­ளித்து நாட்டின் இரா­ணுவப் படை­களைக் காட்­டிக்­கொ­டுக்கும் பொது பல சேனாவின் வெட்­கம்­கெட்ட செய­லையும் கண்­டிக்­கின்­றது.

ஆகஸ்ட் 08ஆம் திகதி கொழும்பில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன்­னணி ஆர்ப்­பாட்டம் செய்­த­போது பொது பல சேனா மௌன­மாக இருந்­ததை தேசிய ஷூறா சபை நினை­வு­கூர்­வ­துடன் நாட்டில் சிங்­கள – முஸ்லிம் ஒற்­று­மையை அழித்து அதன் மூலம் வெளி­நாட்டு சக்­தி­களின் பிர­தி­நி­தி­யாக இலங்­கையைச் சீர்­கு­லைத்து, மத்­திய கிழக்கு முஸ்லிம் நாடு­க­ளி­ட­மி­ருந்து 50% இற்கும் அதி­க­மான தனது அந்­நி­யச்­செ­லா­வ­ணியை ஈட்டும் இலங்­கையின் பொரு­ளா­தார மற்றும் ஏனைய வாய்ப்­புக்­களைப் புறக்­க­ணித்து, ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்­கான முஸ்லிம் நாடு­களின் ஆத­ரவைச் சிதைப்­ப­தற்கு முயற்­சிப்­பதை குறிக்­கோ­ளாகக் கொண்ட தேச­து­ரோக சக்­தியே பொது பல சேனா என்­பதை தேசிய ஷூறா சபை மீண்­டு­மொ­று­முறை வலி­யு­றுத்­து­கின்­றது.

பொது பல சேனா­வையும் அதனை ஒத்த ஏனைய குழுக்­க­ளையும், தேச­து­ரோக மற்றும் சம­யங்­க­ளுக்­கெ­தி­ரான செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து ஒதுங்கி, அதி­க­ரித்து வரும் எண்­ணிக்­கை­யி­லான கொலைகள், கற்­ப­ழிப்­புகள், கொள்ளைச் சம்­ப­வங்கள், வன்­முறை, போதைப்­பொருள் பாவனை போன்ற குற்­றங்­க­ளுக்கு எதி­ரான பிரச்­சா­ரத்தை மேற்கொள்வதற்கு அனைத்து சமய தலைவர்களுடனும் கைகோர்த்து செயற்படுவதற்கு அறிவூட்டுமாறு மல்வத்த பீடம், அஸ்கிரிய பீடம் மற்றும் சியம் நிகாயவின் மதிப்பிற்குரிய மஹா நாயக்க தேரர்களை தேசிய ஷூறா சபை விநயமாகக் கேட்டுக்கொள்கின்றது.

இந்தத் தீர்மானத்தை இலங்கையின் ஜனாதிபதி அவர்களுக்கும், ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும், மதிப்பிற்குரிய மஹா நாயக்க தேரர்களுக்கும் மதிப்பிற்குரிய பௌத்த தேரர்களுக்கும், விகாரைகளுக்கும், இந்து, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க சமூகத் தலைவர்களுக்கும் அனுப்பிவைப்பதற்கு தேசிய ஷூறா சபையின்  பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham