அரசாங்கம் பௌத்த விரோத சட்டங்களை அமுல்படுத்த முயற்சிக்கின்றது – ரணில்

Wednesday, August 13, 20140 comments


அரசாங்கம் பௌத்த விரோத சட்டங்களை அமுல்படுத்த முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பௌத்த மாஹாநாயக்க தேரர்களையும் பௌத்த விஹாரைகளையும் பாதிக்கக் கூடிய வகையிலான சட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த முயற்சியானது சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த ஆணையாளர் நாயகம் என்ற ஒரு பதவியை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை எனவும், அவை மாஹாநாயக்க தேரர்களின் அதிகாரத்தை விடவும் குறைந்தவை எனவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

எனினும் புதிய சட்டத்தின் பிரகாரம் ஆணையாளர் நாயகத்தினால் பௌத்த மஹாநாயக்க தேரர்களையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். அரசாங்கம் பௌத்த கொள்கைகளை இராணுவ மயப்படுத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham