சட்டபூர்வ நிகழ்வுகளை குழப்ப பௌத்த பிக்குகளை பயன்படுத்துகிறது அரசு
Wednesday, August 13, 20140 comments
சட்டபூர்வமான நிகழ்வுகளை குழப்புவதற்காக பௌத்த பிக்குகளை பயன்படத்தும் அரசாங்கத்தின் தந்திரோபாயத்தை இலங்கையின் முன்னணி அரசசார்பற்ற அமைப்புகள் கடுமையாக சாடியுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1980களில் சிவில் அமைப்புகளுடன் இணைந்து மனித உரிமைப் பணியாளராக செயற்பட்டதை மறந்துவிட்டார் எனவும் அந்த அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.
ஒரு வார காலத்திற்கு முன்னர், பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டத்தால் காணமற் போனோரின் குடும்பத்தவர்கள் கலந்து கொண்ட கூட்டம் குழப்ப்பட்டது.
இந்தக் கூட்டம் குழப்பப்பட்ட மத மற்றும் சமூக நிலையத்தில் செய்தியாளர் மாநாடொன்றை, இலங்கையின் முன்னணி அரசசார்பற்ற அமைப்புகள் நேற்றுக் கூட்டாக நடத்தியுள்ளன.
இந்த செய்தியாளர் சந்திப்பில், கருத்துச் சுதந்திரத்தையும், ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தையும், சட்டபூர்வமான நிகழ்வுகளை நடத்தும் உரிமையினையும், பௌத்த பிக்குகளை பயன்படுத்துவதன் மூலமாக குழப்புவதன் மூலம், அரசமைப்பு மூலமாக தங்களுக்கு உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை அரசாங்கம் மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளன.
நாடு ஆளப்படும் விதம் காரணமாக குறிப்பிட்ட கும்பல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையில் செயற்படுவதாக மனித உரிமை பணியாளர் நிமல்கா பெர்ணாண்டோ குற்றம் சாட்டினார்.
சிவில் சமூக பணியாளர்கள் துரோகிகள் இலங்கைக்கு எதிராக போராடுகின்றனர் என்ற கருத்தை நிராகரித்த அவர் நாங்கள் ஒடுக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராகவே போராடுகின்றோம் என குறிப்பிட்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.jpg)
Post a Comment