விளையாட்டுத்துறையை அரசியல்மயமாக்க கூடாது – ரணில்
Sunday, August 24, 20140 comments
விளையாட்டுத்துறை அரசியல் மயமாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் சக்திமயப்படுத்தப்பட்டு, விளையாட்டுத்துறையின் சுயாதீனத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இளைஞர் முன்னணியின் கொழும்பு மாவட்ட கிளையினால் நடத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை அரசியல்மயப்படுத்தப்படுவதால், திறமையானவர்கள் புறந்தள்ளப்படுவதாக ரணில் விக்ரம சிங்க இதன் போது குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment