நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில்
போராட்டம் நடத்தப்பட உள்ளதாக மாதுலுவே சோபித தேரர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 26ம் திகதி முதல் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி முறைமையின் பாதக விளைவுகள் குறித்து மக்களுக்கு
தெளிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
என்ன காரணத்திற்காக பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும்
தெளிவுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள், சிவில்
அமைப்புக்களுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட
உள்ளன. நாட்டின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இந்தக் கூட்டம் நடத்தப்பட
உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதல் கூட்டம் கண்டி இந்து கலாச்சார
மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரம்
Saturday, August 23, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment