இணக்கப்பாட்டை மீறி இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்

Thursday, August 14, 20140 comments


காஸா பகுதியில் மோதல் தவிர்ப்பு நீடிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் மீண்டும் காஸா தரப்பினர் மூம தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது.

காசாவில் இருந்து நடத்தப்பட்ட றொக்கட் தாக்குதலைத் தொடர்ந்து, தாம் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனினும் அவ்வாறான தாக்குதகள் காஸா மேற்கொண்டதாக தெரியவில்லை.

கெய்ரோவில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ஏற்கனவே அமுலில் இருந்த மூன்று நாள் யுத்த தவிர்ப்பு மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த இணக்கப்பாட்டினை இஸ்ரேல் மீறியுள்ளது.

இந்த நிலையில் குறித்த மோதல் தவிர்ப்பு தொடர்ந்து கடைபிடிக்கப்படுமா? கைவிடப்படுமா? என்பது தொடர்பில் இன்னும் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham