ஈராக் மோதல்கள் காரணமாக இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை!

Friday, August 15, 20140 comments


ஈராக்கில் நடைபெற்றுவரும் மோதல்கள் காரணமாக இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (14) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலலளிக்கும்போதே  அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்;

ஈராக்கில் 282 இலங்கையர்கள் விமான நிலைய ஊழியர்களாக பணிபுரிகின்றனர். மோதல்கள் நடைபெறும் இடத்துக்கு மிகத் தொலைவில் இவர்கள் இருப்பதால் எவரும் பாதிக்கப்படவில்லை.

எனினும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் மத்தியில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. பிணக்கைத் தீர்த்துவைக்க இலங்கையில் இருந்து உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அங்கு சென்று அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

எனினும் அவர்களில் 37 பேர் தொடர்ந்து பணிபுரிய மறுத்தனர். அவர்களில் 27 பேர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர். மீதி 10 பேர் இன்று அல்லது நாளை இலங்கை வந்து சேர்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham