தர்கா நகர் வெலிபிட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற முஸ்லிம் சிங்கள இளைஞர்களுக்கிடையிலான மோதலையடுத்து சம்பவம் தொடர்பில் அளுத்கம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பு இணக்கத்தின் அடிப்படையில் முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டது. எனினும் அளுத்கம ஜூன் கலவரத்தின் போது தாக்குதலுக்குள்ளானதாக கூறப்பட்ட பிக்குவின் தலையீட்டினால் நான்கு முஸ்லிம் இளைஹர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இப்திகார் ஜெமீல் நம்மவன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
"கால்பந்தாட்ட விளையாட்டுப்போட்டியொன்றை பார்வையிடச் சென்று விட்டு முஸ்லிம் இளைஞர குழுவொன்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், ஜூன் மாதத்தில் இடம்பெற்ற அளுத்கம் சம்பவத்தின் போது இடம்பெற்ற தாக்குதல்களின்போது காலை இழந்த முஸ்லிம் இளைஞரை சிங்கள இளைஞர்கள் கேலி செய்துள்ளனர். அவமானப்படுத்தும் வகையிலான வர்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட சிங்கள இளைஞர்கள் முஸ்லிம் இளைஞர்களை கோபமூட்டியுள்ளனர்.
இதனையடுத்து தர்கா நகர், பத்திராஜகொட பிரதேசத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் கைலப்பொன்று இடம்பெற்றது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் சமாதானப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த முறைப்பாடுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு அளுத்கம வன்முறையின் ஆரம்ப புள்ளியாக அமைந்த பிக்கு தாக்குதல் சம்பவத்துடம் தொடர்புடைய பிக்கு தலைமையிலான குழுவொன்று பொலிஸ் நிலையம் சென்று குறித்த முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தர்கா நகர், வெல்பிட்டி பிரதேசத்தினை சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் இவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்ற பின்னர் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment