மாவனெல்ல தெவனகல, உயன்வத்தை பிரதேசங்களை சேர்ந்து இரு மாணவர்கள் மா ஓயாவிற்கு குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெவனகல பிரதேசத்தை சிங்கள மாணவன் ஒருவனும் உயன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த இரு முஸ்லிம் மாணவர்களும் மா ஓயா ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
நூரானியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 13 வயதுடைய முனீப் என்ற மாணவனும் மற்றுமொரு சிங்கள மாணவனும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இருவர் நீரில் மூழ்கியுள்ள நிலையில் ஒரு மாணவன் பயத்தின் காரணமாக தலைமறைவாகியுள்தாக மாவனெல்லை செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment