மொனராகலை மாவட்டத்தில் காணப்படும் அசாதாரண நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் அரசியல் கட்சி அலுவலகங்கள் தாக்கப்படுவது குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துச் செல்வதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலை எதிர்காலத்திலும் தொடரக்கூடிய அச்சம் இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இன்று (30) அதிகாலையும் மொனராகலை மாவட்டத்தில் கட்சி அலுவலகங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் மொனராகலை மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment