இஸ்ரேலிய டெல் அவிவ் நகரின் புற நகரப்பகுதியான றிஷொன் லெஸியன் பிரதேசத்தில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மணமகனும் மணமகளும் கடும் பாதுகாப்புடன் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மஹ்மூத் மன்சூர் (26 வயது ) என்ற முஸ்லிம் இளைஞரே யூத இனத்தை சேர்ந்த மரால் மல்கா என்ற யுவதியுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
யூதராக பிறந்த மல்கா திருமணத்துக்கு முன் இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தார்.
மஹ்மூத் மன்சூரும் மல்காவும் திருமண பந்தத்தில் இணைய ஏற்கனவே மேற்கொண்ட முயற்சிகள் கல்பு திருமணத்துக்கு எதிர்ப்பை கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் தோல்வியை தழுவியிருந்தது.
இந்நிலையில் அவர்கள் தமது திருமண வைபவத்துக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் இறங்கினர்.
ஆனால் நீதிமன்றம் அவர்களது கோரிக்கைக்கு இணங்க மறுத்துள்ளது.
இந்நிலையில் மஹ்மூத் மன்சூரும் மல்காவும் பெரும் தொகையான பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை தமது சொந்த செலவில் பணிக்கு அமர்த்தி திருமண மண்டபத்திற்கு 200 யார் தூரத்திக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை பிரவேசிக்காது தடுத்துள்ளனர்.
அதேசமயம் அத்து மீறி பிரவேசிக்க முயன்ற 4 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஸா பிராந்திய மோதல்கள் காரணமாக இஸ்ரேலிலுள்ள யூதர்களுக்கும் அரபு பிரஜைகளுக்கும் இடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

Post a Comment