குருக்கள்மடம் மனித புதைகுழி நாளை தோண்டப்படும்!
Sunday, August 17, 20140 comments
நீதிமன்ற உத்தரவிற்கமைய மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கை நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுமென களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் அகழ்வு பணியின்போது- காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதி ஒருவரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவாரென ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.
கடந்த 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற 168 முஸ்லிம்கள் குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி கொலைசெய்து புதைக்கப்பட்டதாக அவர்களது உறவினர்கள்- காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
அத்துடன்- குறித்த சடலங்களின் எச்சங்களையாவது தங்களிடம் ஒப்படைக்குமாறு உறவினர்களால் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியால் குறித்த புதைகுழிகளை நாளை தோண்டுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment