முஸ்லிம், மலையக தலைமைகள் கைகூலிகளாகவே இருக்கின்றன - செந்தில்வேல்
Thursday, August 14, 20140 comments
மலையகம் மற்றும் முஸ்லிம்களின் தலைமைகள் பேரினவாதிகளின் கைக்கூலிகள்போல அவர்களுக்கு இனங்கியே நடக்கின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என புதிய ஜனநாயக மார்க்ஸிய லெனினிசக் கட்சித்தலைவர் எஸ்.கே. செந்தில்வேல் தெரிவித்தார்.
தேசிய இனம் என்பதில் மலையகம் முஸ்லிம்கள் என்று அனைவரும் உள்ளடக்கப்பட வேண்டும். அவற்றையும் தேசிய இனமாக ஏற்றுக்கொண்டு ஒன்றுபட்டு செயற்படுதல் காலத்தின் அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
வல்லிபுரம் திருநாவுக்கரசுவின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வின்றி இலங்கைக்கு விடிவில்லை என்ற நூல் வெளியீடு நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இதன்போது நூல் ஆய்வுரையை வழங்கிய போதெ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment