பதுளை முஸ்லிம்களுக்கென அமைச்சர் நிமல் சிறிபால பெரிதும் பங்காற்றியுள்ளார் - அஸ்வர் எம்.பி. புகழராம்
Sunday, August 31, 20140 comments
பதுளை வாழ் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா செய்துள்ள அபிவிருத்திப்பணிகள் பாரியவை. வேறு எந்த தலைவர்களாலும் செய்ய முடியாது என்பதை இப்பகுதி மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அந்த வகையில் நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு வாக்களித்து வெற்றி பாதைக்கு இட்டுச்செல்வது உறுதியாகி விட்டது என ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
சில்மியாபுரம் பொரகஸ் பாதினாவெல பதுலுசிரிகம மற்றும் நெலும்கம ஆகிய இடங்களில் இடம்பெற்ற பிரசார கூட்டங்களின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
எவ்வித அபிவிருத்தியும் காணாது பின் தள்ளப்பட்ட பிரதேசமாக காணப்பட்ட சில்மியாபுரம் இன்று சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்ட பிரதேசமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் முதன்மை வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமா ரத்நாயக்காவை வெற்றி பெறச்செய்தது. இப்பகுதியின் அபிவிருத்தி பணிகளை மேலும் முன்னெடுத்து செல்ல மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment