மல்வத்த தேரர்களிடம் பொதுபலசேனா குறித்த முறைப்பாடு
Thursday, August 14, 20140 comments
அஸ்கிரிய, மல்வத்த தேரர்களிடம் பொதுபலசேனா குறித்த குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள்குழு ஒன்று முன்வைத்தது:-
அமைச்சர்கள் குழுவொன்று அஸ்கிரிய, மல்வத்த தேரர்களை சந்தித்து பொது பல சேனா குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் ஒரு பௌத்த பிக்கு போன்று செயற்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனை செவிமடுத்த அஸ்கிரிய ,மல்வத்த தேரர்கள் சட்டத்தை மீறும்பௌத்த துறவிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான ஆதரவை வழங்கியதாக அமைச்சர் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார். பௌத்த போதனைக்கு எதிராக செயற்படும் பிக்குகளுக்கு எதிராக தாம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்கள் உறுதி mளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment