பள்ளிவாசலுக்கு 400 வருட வரலாறு கிடையாது : இராணுவம் மறுக்கிறது
Thursday, August 21, 20141comments
திருகோணமலை கருமலையூற்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் முற்றாக தகர்க்கப்பட்டது என்பது பொய்யான தகவல் எனவும் அந்த பள்ளிவாசலில் புனர்நிர்மாணப் பணிகளே இடம் பெறுவதாகவும் இராணுவ மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமையத்தின் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
குறித்த இராணுவ முகாமுக்குள் பயன்படுத்தப்படாத ஒரு பள்ளிவாசல் காணப்படுவதாக அவர் தெரிவித்ததுடன், சில ஊடகங்களில் இந்தப் பள்ளிவாசல் சுமார் 400 வருட வரலாறு கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை தான் மறுப்பதாகவும் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் ரொப்பட் நொக்ஸால் 1600 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் அக்காலப்பகுதியில் இவ்வாறான ஒரு பள்ளிவாசல் காணப்பட்டமைக்கான எந்தவொரு ஆதாரங்களும் குறிப்பிடப்படவில்லை எனவும் அந்த அடிப்படையில் இந்தப் பள்ளிவாசலுக்கு 400 வருட வரலாறு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தப்பள்ளிவாசல் முழுமையாக உடைத்து அகற்றப்பட்டது என்ற விடயம் பொய்யானது எனவும் அந்த இடத்தில் புனர்நிர்மாணப்பணிகளே இடம் பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

+ comments + 1 comments
dsa
Post a Comment