இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுக்கவே ஜனாதிபதி குரல் கொடுத்திருக்க வேண்டும் - ஹரிசன்
Thursday, August 21, 20140 comments
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுக்கவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குரல் கொடுத்திருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதில் பயனில்லை எனவும், மாறாக இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் அவர் வலிறுயுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த, இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வழமை போன்றே எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் குழம்பிப் போயிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில்பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவி பலஸ்தீனங்கள் கொல்லப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உகண்டாவின் நீர் வடிகாலமைப்பை மேம்படுத்த அரசாங்கம் நன்கொடை வழங்கியுள்ளதாகவும், அனுராதபுரம் பொலனறுவை ஆகிய பகுதியில் மக்கள் குடிநீர் இன்றி அவதியுறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் குறுகிய கால நோக்கங்களினால் நாட்டின் பல தறைமுறைகள் கடனாளியாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment