170 லிபிய பயணிகளுடன் சென்ற படகு மூழ்கி விபத்து
Sunday, August 24, 20140 comments
லிபிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 170 குடியேற்றவாசிகளுடன் சென்ற படகொன்று சனிக்கிழமை மூழ்கியதில் அதில் பயணம் செய்த பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இதுவரை கரையோரக் காவல் படையினரால் 17 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். திரிபோலி நகரின் கிழக்கேயுள்ள கடலில் இந்த படகு மூழ்கியுள்ளது. அந்தப் படகு மூழ்குவது தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் சனிக்கிழமை காலையே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதும் அதிகாரிகள் அங்கு வந்த போதும் அந்த படகு முழுமையாக மூழ்கியிருந்தது.
லிபியாவில் நிலவும் அரசியல் பதற்ற நிலை காரணமாக அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோத பயணங்களை மேற்கொள்பவர் தொகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment