இனவாத அலையும் இலங்கை முஸ்லிம்களும்...

Sunday, July 6, 20140 comments


வைத்தியர்.அற எப்.மொஹிதீன்


இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களாக எமது முஸ்லிம் சமுதாயம் சொல்லோனாக் கொடுமைகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளாகி வருவது யாவரும் நன்கு அறிந்த விஷயம். சரித்திரத்தில் ஒருபோதும் இல்லாத அளவு மிகவும் கவனமாக திட்டமிடப் பட்ட வகையில் இந்த இனவாத சதித் திட்டம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அரச ஆதரவுடன் நிறைவேறி வருவது மிகுந்த மன வேதனையையும் வெறுப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. இந்த நாடகத்தின் உச்சக் கட்டமாக அளுத்கம சம்பவங்கள் அமைநதுள்ளது என்றால் அது மிகையாகாது. பல வீடுகள்,பள்ளிவாயல்கள் ,கடைகள், எரிக்கப் பட்டும் தாக்கப் பட்டும் உள்ளன. மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன.

தற்போது இவற்றுக்கான பின்னணிகளை  கண்டறிய முயல்வோம்.
௧. நாம் முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டோம். குறிப்பாக அரசியலைப் பொறுத்த வரையில் எம் மத்தயில் இஸ்லாம் என்பது மருந்துக்குக் கூட இல்லை. குர்ஆனையும் ஹதீசையும் எம் சமூகம் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. குர்ஆனையும் ஹதீசையும் அடிப்படையாக வைத்து அமைக்கப் பட்ட கட்சியில் உள்ள முக்கியஸத்தர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. அரசியல் வாழ்க்கை என்றாலும் சரி, தனிப் பட்ட வாழ்க்கை என்றாலும் சரி, இவர்கள் இஸ்லாத்தையோ, மருமையையோ முன்வைத்து அரசியல் செய்யவில்லை என்பது நாடே அறிந்த விடயம். சொந்த வாழ்க்கையில் இஸ்லாத்தை பேணாத இவர்களினால் எவ்வாறு இஸ்லாமிய சமூகத்தை வழிகாட்ட முடியும்...? சுயநலவாத, சந்தர்ப்பவாத, பிச்சைக்காரத் தனமான, கேவலமான, ஜால்ரா அரசியல்வாதிகளினால் எவ்வாறு இஸ்லாமிய சமுதாயத்தைப் பிரதிநிதிதுவப் படுத்த முடியும்.? அரசியலில் புக முன்னர் பிச்சைக்கார நிலையில் இருந்த இவர்கள் இன்று பெரும் கோடிஸ்வரர்கள். இது எவாறு சாத்தியம்.? சீதனம், வட்டி பதுக்கல். ஏமாற்று என்று வாழும் இவர்களினால் யாருக்கு என்ன பயன்? இஸ்லாமிய சட்டங்களின்படி தகுதி அற்றவர்களுக்கு பட்டம் பதவிகள வழங்குவது ஹராம். கோடிக் கணக்கான ரூபாகளைச் செலவழித்து ஹராமான வழிகளைக் கையாண்டு  தேர்தலில் வெற்றி கான்பதுதான் இஸ்லாமா? இவர்களுக்குப் பின்னால் ஒரு சில ஆலிமகளும், புத்திஜீவிகளும் துனியாவின் தேவை கருதி  அலைந்து திரிவது மிகவும் மன வேதனைக்குரிய விடயம்.

 இன்று வெறுமனே கூகுரளிடுவதன் மூலம் எம்மவர்களின் பறிக்கப் பட்ட உயிர்களை திருப்பிப் பெற முடியுமா?. கோடிக்கனக்கான சொத்துகளைப் பெற முடியுமா? இவர்களின் துணை கொண்டுதானே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதியின் ஆட்சிக் காலம் நீடிக்கப் பட்டது.? அல்லாஹுவையும் அவனது இஸ்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு எம்மவர்களனால் வெற்றி கனியை அடைய முடியுமா.? அல்லது அல்லாஹுவுக்காக மட்டும் வேண்டி அரசியல் செய்யக் கூடிய முஃமின்க்ள எம் மத்தியில் இல்லை என்று நினைக்கிறீர்களா? இன்னும் கூட பொது பலசெனாவை தடை செய்ய முடியாமல் இருப்பது, சூத்திரதாரிகைக் கைது செய்ய முடியாமல் இருப்பது  இவர்களின் இயலாத் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது அல்லவா? இவ்வாறான அரசியல்வாதிகள் நம் மத்தியில் உள்ளவரை ஒருபோதும் உண்மையான ஒற்றுமை ஏற்படவே மாட்டாது. எமது சமூகம் முன்னேறாது. மாறாக நாளுக்கு நாள் அழிவையே நோக்க வரும்.
2. புத்த மதத்தில் ஒருபோதும் இனவாதம் போதிக்கப் படவில்லை. இம் மதத்தை நன்கு கற்றவன் எனும் முறையில் இதனை என்னால் உறுதியாக கூற முடியும். அனால் இன்று தம்மை பௌத்த வாதிகளாகக் காட்டிக் கொள்ளும் ஒரு சிலரிடம் , குறிப்பாக அரசியல் அதிகாரம்  உள்ளவர்களிடம் உணமியான பௌத்த சிந்தனை மருந்துக்குக் கூட இல்லை என்பது கண்கூடு. இவர்களும் எம்மவர்க்ளைப் போன்று மதத்தை விற்றுப் பிழைக்கிறார்கள். ஏனைய இனங்களை அளித்தாவது தாம் முன்னேறி விடுவோம் என்று பகல் கனவு கானகிரார்கள். அனால் இது ஒரு போதும் சாத்தியமாகாது. இந்த இனவாத அலைகல்லுகுப் பின்னல் அரச இயந்திரம் உள்ளமை உள்ளங்கையில் நெல்லிக் கனி.

தற்போது இந்த இனவததுக்குப் பின்னால் இருக்கக் கூடிய லாப நட்டங்களை உற்று நோக்குவோம்.

1 .பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போன்று செயல்படல். அதாவது முஸ்லிமகளை வன்முறைக்குள்ளாகி பின்னர் நல்ல விதத்தில் நடப்பதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல பெயர் எடுத்தல்.

2 .இந்த அரசு இனிவரும் தேர்தல்களில் நீதியான இனவாதமற்ற ஜனநாயக முறைகளில் நம்பிக்கை இழந்து  இனவாதத்தின் மூலம் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்று நம்புவதானது இந்த வன்முறைகளுக்கு மூலகாரணமாக இருக்க முடியும்.

3.ஒரு சில வேளை பிரச்சினைகளை உருவாக்கி , அவற்றிப் பூதாகரமாக்கி பின்னர் நாட்டைப் பாதுக்கப்புப் படையினரிடம் ஒப்படைக்கிறோம் என்று கூறி மறைமுகமாக நாட்டை நிரந்தரமாக ஆளும் சூழ்ச்சியாகவும் இருக்க கூடும்.

4.சாலவைகளுக்கிடையான அதிகாரப் போட்டியின் ஒரு அங்கமாகவும் இது இருக்கக் கூடும். மற்றவரினால் செய்ய முடியாத காரியத்தை என்னால் செய்ய முடியும் என்று அதிகாரத்தை கைப் பற்றவும் வாய்ப்புண்டு.

5.தற்போதுள்ள மிகவும் நெருக்கடியான நிலைமைகளில் இருந்து அரசாங்கத்தைக்  காப்பற்றிக் கொள்ள மக்களின் கவனத்தை திசை திருப்ப மேற்கொள்ளும் ஒரு சதியாகவும் இருக்க முடியும்.

6.அரசுக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சகதிகளின் மீது பலி சுமத்தும் கபட நாடகமாகவும் இது இருக்க முடியும்.

7.வெளிநாடுகளில் உள்ள தமிழ் டயாஸ் போரவின் அல்லது யூத  பணத்துக்காக நடத்தும் நாடகமாகவும் அமையக் கூடும்.

சுருக்கமாக் கூறின் பின்னனிகலும். காரணிகளும்  எதுவாக இருப்பினும் இதனால் நஷ்டம் அடைத்தவர்கள நாமே. இந்த பிரச்சினைகளின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் நமது ஒற்றுமை பலப் பட்டதும். சுயநல அரசியல்வாதிகளின் சுய ரூபம் வெளிப் பட்டதுமே. எனவே அன்பு இஸ்லாமிய உள்ளங்களே, நான் உங்களிடம் மிகவும் தாளமையுடன் கேட்டுக் கொள்வது , அல்லாஹுவுக்காக, அரசுளுக்காக இந்த அரசியல்வதைகளுக்கு இனியும் ஒற்றை வாக்கேனும் அளிக்க வேண்டாம். மாறாக எந்தக் மாற்றுகட்சியினூடகவாவது அல்லாஹுவுக்காக வேண்டி மட்டும் அரசியல் செய்ய முன் வரும் முஃமின்களுக்கு மாட்டுமே வாக்கு அழையுங்கள். அதேபோல் சகோதரங்களே, அல்லாஹுவுக்கக் அரசியல் செய்ய முன் வாருங்கள். நிச்சயம் இம்மையில் இல்லாவிடினும் மறுமையில் வெற்றி நிச்சயம்.

ஆளுங் கட்சியில் இருந்தாலும் எதிர்க் கட்சியில் இருந்தாலும் சரிதான், அபிவிருத்திக்கு என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ,மாகாண சபை உறுப்பினருக்கு கிடைக்கும் பணம் பொதுவானது. சரிசமமானது. அது மட்டும் அல்லாமல் சமுதாய நோக்கு இருந்தால் எதிர்க் கட்சியில் உள்ளவர்களினால் கூட  பலவிதமான முறையில் தமது சமுதாயதுக்கு  உதவிகள் செய்ய முடியும். எனவே அபிவிருத்தி எனும் மாயையில் சிக்கி ஜாலராகளுக்கு வாக்களிக்க வேண்டாம். ஒட்டுன்னிகளை உதறித் தள்ளி விடுங்கள். இனிவரும் காலங்களிலாவது இன்ஷா அல்லாஹு அரசியலில்  தூய இஸ்லாத்துக்கு  இடம் அளிப்போமாக .அல்லாஹுவுக்கக் அரசியல் செய்ய முன்வருவோரைச் சரியான முறையில் இனம் கண்டு, அவர்களிடம் சரியான முறைகளில் உறுதி மொழி வாங்கி , பின்னர் அவற்றி நிறைவற்றுவதில் உறுதியாக இருக்கின்றர எனக் கண்காணிப்பதன் மூலம் எமது சமுதாயத்தில் ஒரு இஸ்லாமிய ரீதியிலான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று உருதியாக நம்புகிறேன். அத்துடன் அவர்கள் அவர்களது சதியளையும் உறுதி மொழிகளையும் மீறுமிடத்து  கடும் தண்டனை கொடுப்பதும் மிகவும் முக்கியம்.எனவே அன்பு உள்ளங்களே ,இனிவரும் கலங்களில் மிகவும் கவனமாக இஸ்லாமிய ரீதியில் சிந்தித்து செயல் படுவீர்கள் என்று நம்புகிறேன். பீசபிளில்லாஹ்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham