இனவாத எருமை மாடும் கேய்ஹாமியும் - ஓர் உரையாடல்

Sunday, July 6, 20140 comments



சிங்களத்தில்: நதீஷ் திக்கும்புர
தமிழில்: எம்.ஜே பிஸ்ரின் முஹம்மத்

''ஹாமினே.... ஹாமினே.... இன­வாத எரு­ம­மாடு ஒன்று குழம்­பி­டுச்சி'' என்று கத்திக் கொண்டு கேய்­ஹாமி  வந்தார்.

''ஐயோ! சும்மா இருங்­களேன் ஏதோ டைனோசர் ஒன்­றுக்கு உயிர் வந்­துட்­டது போல இல்­லையா கத்­து­றீங்க.... எரு­ம­மாடு ஒன்­றால அவளோ பெரிய அழிவு  ஏற்­ப­டுத்த முடி­யுமா?'' என்று ஹாமினி கேட்டாள்.

''நீ என்ன சொல்ற... டைனோசர் ஒன்ற விட மிகப்­பெ­ரிய அழிவை ஏற்­ப­டுத்தும் சக்தி இன­வாத எரு­ம­மாட்­டுக்கு இருக்கு'' என்று கேய்­ஹாமி சொன்னார்
''இந்த இன­வாத எரு­ம­மாடு ஒன்னும் சும்மா குழம்பி இருக்­காது'' என்று ஹாமினி சொன்­னது தான் தாமதம்...

''அந்த பல... இந்த பல... பொது பல எல்லாம் தட­மாறிக் கொண்­டி­ருந்­தது இந்த இன­வாத எரு­ம­மாட்டை குழப்­பி விடத்­தானே.... இப்போ வேலை சரி... இன­வாத எரு­ம­மாடு அளுத்­கமை பேரு­வளை பக்­கத்த நாசப்­ப­டுத்­தது''ன்னு கேய்­ஹாமி சொன்னார்.

''அய்யோ! இந்­த­ள­வுக்கு நாசப்­ப­டுத்­துர அந்த இன­வாத எரு­ம­மாட்ட புடிச்சி மரத்­து­ல­கட்ட முடி­யா­தாங்க... ஏன் அழிவு ஏற்­ப­டுத்­துற வரைக்கும் அரசு பாத்­து­கிட்டு இருக்­கு­து?'' என்றார் ஹாமினி.

''அதுதான் எனக்கும் குழப்­பமா இருக்கு......  ஏன் அர­சாங்கம் இந்த இன­வாத எரு­ம­மாட்ட புடிச்சி மரத்­துல கட்­டு­தில்ல? நாட்டை அழி­வுக்­குள்­ளாக்­குற இந்த  எரு­ம­மாட்டை அரசு பாத்­துக்­கிட்டு இருக்­கு­து?'' என்­டாரு கேய்­ஹாமி.
''என்­னங்க இப்போ குழம்பி இருக்­குற இந்த இன­வாத எரு­ம­மாடு சிங்­க­ளமா, முஸ்­லிமா, தமிழா?'' என்று கேட்டா ஹாமினி.

''இன­வா­தத்­துக்­குன்னு தனியா ஒரு இனம் இல்ல...  எல்லா இனத்­து­லயும் இன­வா­தத்தை  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­த பொது­வான ஒரு எரு­ம­மா­டுதான் இருக்கு ஹாமினே''

 ''ஹாமினே உங்­க­ளுக்கு தெரி­யுமா?  இந்த இன­வாத எரு­ம­மாடு மக்­கள முட்­டிச்­சினா என்ன நடக்­கும்னு?''

கேட்டு வாய்­மூட முதல் ஹாமினே சொன்னா

''என்ன நடக்­கப்­போ­குது முட்­டினா காயம் வரும் அவளவுதானே!''

''அப்­ப­டில்ல ஹாமினே காயத்தை ஏற்­ப­டுத்­து­வத விட இன்­னொரு பெரிய விசயம் நடக்கும்...... ஒரு மனு­சன இந்த  இன­வாத மாடு முட்­டிச்­சினா அவனும் எரு­ம­மாடா மாறி அவனும் முட்டி முட்டிப் போவான்....."  என்று கேய்­ஹா­மினி சொன்னார்.

''ஆ.... அப்­ப­டியா? அப்­ப­டினா இது தொற்று நோய் போல பர­வுமா?'' என்று ஆச்­ச­ரி­யத்­தோடு ஹாமினே கோட்டாள்.

''இல்­லாம... முட்ட முட்ட ஒவ்­வொ­ருத்­தரும் இன­வாத எரு­ம­மா­டு­களா மாறிக் கொண்டே போவாங்க... இந்த இன­வாத எரு­மை­கள அர­சாங்கம் ஒன்னும் பன்­ன­லன்னா இந்த நாடு இன­வாத எரு­மை ­மா­டுகள் நிரம்­பிய  ஒரு நாடாக மாறிடும்...... கொறஞ்­சது பகுத்­த­றிவு உள்ள மக்­க­ளா­வது இத உணர்ந்து ஏதா­வது செய்­யல்­லனா பேர­ழிவு ஒன்று தான் ஏற்­படும்'' என்றார் கேய்­ஹாமி.
''சரிங்க இந்த பேரு­வளை, அளுத்­கமை பக்கம் இவ்­வ­ளவு பெரிய அழிவு ஏற்­பட காரணம் என்ன?'' என்று ஹாமினி கேட்டாள்.

''ஹாமு­துரு ஒருத்தர் வாக­னத்தில் போகும் போது அந்த வாக­னத்தின் ட்ரைவர் ரோட்ல இருந்த முஸ்லிம் பொடி­யன்­மா­ருங்க கூட  ஏதோ பிரச்­சினை ஏற்­ப­டுத்­தி­ருக்கான்.....''
''சிலர் செல்­ராங்க ஹாமு­து­ருவ அந்த முஸ்லிம் பொடி­யன்மார் அடிச்­சதாக... சிலர் செல்­றாங்க அப்­படி நடக்­கல்­லனு.....''

''சரி.... ஹாமு­து­ருக்கு அடிச்­ச­தாவே இருக்­கட்­டுமே..... அப்­படி அடிச்­சி­ருந்தா அடிச்­ச­வங்­கட தவறு அது, அப்போ அவங்­க­ளுக்கு எதிரா சட்ட நட­வ­டிக்கை எடுக்­கனும். அது இல்­லாம மீட்டிங் போட்டு, ஊர்­வலம் பெய்த்து, முஸ்லிம் மக்­கள அடிச்சி அவங்­க­ளோட சொத்­துக்­கள சேதப்­ப­டுத்­து­றது சரியா?'' என்றார் கெய்­ஹாமி.

''அப்போ! சிங்­க­ள­வர்­கள அடிச்சி அவங்­கட சொத்­தெல்லாம் சேதப்­ப­டுத்தப்படல்­லை­யாங்க'' என்று ஹாமினே கேட்டாள்.

''சட்டம் நீதி என்­ப­வற்­றுடன் தொடர்­பு­பட்ட விட­யங்­களை இனத்­துடன் தொடர்புபடுத்தி இன­வா­தத்தை மேலோங்க செய்தா அழி­வைத்­த­விற வேற எதுமே மிஞ்­சப்­போ­ர­தில்ல ஹாமினே......''

''சிங்­கள, பௌத்தத்தின் பெயரைச் சொல்லிக் கொண்­டி­ருக்கும் அமைப்­புகள்  சிங்­க­ள­வர்­க­ளுக்கு அசா­தா­ரணம் நடப்­ப­தாக சொல்­­றாங்க....
தமிழ், முஸ்லிம் பெயர் தாங்­கிய அமைப்­பு­களும் சொல்­கின்­றன தமது இனத்­துக்கு அசா­தா­ரணம் நடப்­ப­தாக....
அப்போ இத­வெச்சி பார்த்­தம்னா எந்த சமூ­கத்­துக்கும் எது­வுமே நல்லது நடக்­கல்­லையே...... ''

''அப்ப­டின்னா நாங்க  எந்த சமூ­கத்­துக்கும் சாதா­ர­ணமா நடக்­காத இந்த அர­சுக்கு எதி­ராக இல்­லையா போரா­டனும்? அது இல்­லாம ஏன் முஸ்­லிம்­க­ளுக்கு அடிக்க வேண்டும்.....?''

''முஸ்­லிம்­க­ளுக்கு அடித்து அவர்­க­ளது சொத்­துக்­களை நாசப்­ப­டுத்­தினால்  சிங்­க­ள­வர்­க­ளுக்கு நல்லது நடந்­து­வி­டுமா?
''எங்­க­ளப் போ­லவே அந்­தந்த நேரத்­துக்கு சாப்­பிட்டுக் கொண்டு கஷ்­டப்­பட்டு வாழ்ற ஏழை முஸ்­லிம்­க­ளுக்கு அடிச்சி நமக்கு என்ன கிடைக்கப் போகு­துன்னு எனக்­குன்டா புரி­யல்ல ஹாமினே''

''பொது­வா நின்று போராட வேண்­டிய நேரத்­துல இனங்­களா பிரிந்து அடித்துக் கொண்டா அது அர­சாங்­கத்­துக்கு தான் இலாபம்....'' என்றார் கெய்­ஹாமி.

''அப்போ இதுக்கு எல்லாம் அரசு உத­வு­துண்­டா நீங்க சொல்­ல­ வா­ரிங்க?'' என்று ஹாமினே கேட்க,

''இந்த நேரத்­துல அர­சாங்கம் இன­வா­தத்தை தூண்­டுற அமைப்­பு­க­ளுக்கு தன்ட எதிர்­ப்பக்­காட்­டணும்...... இப்­ப­டி­யான  நேரத்­துல அர­சாங்கம் சட்டத்தை சரியா அமுல்­ப­டுத்­தாம இருக்­கு­துண்டா இந்த இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு அரசும் ஆத­ரவா இருக்­கு­துண்டு தான் நாங்க நினைக்க வேண்­டி­யிருக்கு''

''இங்க பாருங்க ஹாமினே... கெம்பஸ் பிள்­ளைகள் ஆர்­பாட்­டத்­துல ஈடு­ப­டக்­கொள்ள  நீதி­மன்ற உத்­த­ரவு எடுத்து அவற்றை நிறுத்­து­ராங்க , கண்­ணீர்­ப்புகை அடிக்­கி­றாங்க, நீர் பீய்ச்சி அடிக்கிறாங்க...., தடி­ய­டி­கூட செய்றாங்க.... ஏன் அப்போ அளுத்­க­மல மட்டும் நீர்த்­தக்­கு­த­லு­மில்ல, கண்­ணீர்­ப் பு­கை­யு­மில்ல, நீதி­மன்ற உத்­த­ர­வு­மில்ல?'' என்று கெய்­ஹாமி கேட்டார்.

''அப்போ நீங்க செல்­லுற அள­வுக்கு பெரிய சேதங்கள் எதுவும் ஏற்­பட்­டி­ருக்­கா?''­ன்னு ஹாமினே சென்னாள்

''சேதத்­துண்ட அளவ மறைத்து சொல்ல முடி­யாது..... வீடுகள் தீவைக்­கப்­ப­டும்­போது, கடை­க­ளுக்கு தீ வைக்கும் போது, இனத்­தைப்­பற்றி யோசிக்­காது சட்டம் நடைமுறைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க  வேண்டும்....... இந்­த­ளவு பெரிய சேதம் இடம்பெறும் போது பிர­பா­க­ரனை அழித்த பாது­காப்பு பிரிவு எங்­கி­ருந்­தது? என்ற கேள்­விதான் எனக்குள் தோன்­று­கின்­றது.

சில­நேரம் வீடு­க­ளுக்கு தீ வைக்­கின்ற, கடை­களை உடைக்­கின்­ற­வர்­களின் மனித உரி­மைகள் மீறப்­பட்­டு­விடக் கூடாது என்­ப­தற்­காக பார்த்துக் கொண்­டி­ருந்­தார்­களோ தெரி­யாது?'' என்றார் கேய்­ஹாமி.

''ஆமா.... ஆமா..... அப்­ப­டியும் இருக்­கலாம்... இப்படி  கடை­களை உடைக்­கிற, வீடுகளுக்கு தீ வைக்­கின்­ற­வர்­க­ளுக்கு துப்­பாக்­கிச்­சூடு நடாத்தி அதில் ஒருவர் இருவர் செத்­துப் ­பெய்த்­தாங்­கன்னா? அப்­புறம் சர்­வ­தே­சத்தில் இருந்து பிரச்­சினை ஏற்­ப­டவும் வாய்­ப்பி­ருக்­குதே......

இந்த துப்­பாக்­கி­களை எடுத்துக் கொண்டு அழிவு ஏற்­ப­டுத்­திய புலி­களை கொன்று யுத்­தத்தை வெற்றி கொண்­ட­துக்கே சர்­வ­தேச உலகம் விசா­ரணை செய்­யனும்  என்று சொல்­லு­றப்போ ஓரிரு கடை­க­ளுக்கும் வீடு­க­ளுக்கும் தீ வைத்­த­வர்­களை சுட்டால் இன்னும் என்ன என்ன விசா­ர­ணைகள் கேட்­பார்­களோ தெரி­யாதே?'' என ஹாமினே சொன்னார்.

''ஐயோ! ஐயோ! நான் சும்மா நக்­க­லுக்கு சொன்­னத  நீ உண்­மைன்டே நினைச்­சிட்­டியா?'' என்று கெய்­ஹா­மி சொல்ல,

''என்ன நக்கல்..... புலிகள் செய்த அளவு பேரு­வ­ளை­யிலோ, அளுத்­க­மை­யிலோ அழிவு ஏற்­ப­ட­வில்­லையே..... இவ்­வ­ளவு பெரிய அழிவு ஏற்­ப­டுத்­திய புலி­க­ளுக்­கா­கவே சர்­வ­தேச உலகம் எழுந்து நிற்கும் போது இந்த வீடு உடைத்­த­வர்­க­ளுக்­கா­கவும் கடைக்கு தீ வைத்­த­வர்­க­ளுக்­கா­கவும் சர்­வ­தேச உலகம் ஆத­ர­வாக இருக்கும் என்­ப­துல இரண்டு கதை­யில்ல......''

''இந்தா இத நினைச்சு தான் பொலி­ஸாரும், இரா­ணு­வமும்  வீடு­களை உடைச்சு கடை­க­ளுக்கு தீ வைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக ஒரு புஸ் வாணத்­தை­யா­வது வெடிக்­க­ல்ல.....''

''இப்படி தாக்­குதல் நடாத்­து­வதை வீடியோ எடுத்து செனல் 4 க்கு அனுப்­பினால் மறு­ப­டியும் இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அவர்கள் ஒரு படம் எடுத்து விடு­வார்கள்.....''

''இப்படி எமது பாது­காப்பு பிரிவு தூர­நோக்­கோடு சிந்­தித்துத்தான் கடை உடைக்­கின்­ற­வர்­க­ளுக்கு கடை­க­களை உடைத்து தீ வைக்­கவும், வீடு­களை தீ வைக்­கவும் விட்டுவிட்டு  பார்த்துக் கொண்­டி­ருந்­தி­ருக்­கின்­றார்கள். இதனால் இப்­போது சர்­வ­தேச உல­கத்­தால  எந்த அழுத்­தமும் இல்லை தானே'' என்று ஹாமினி சொன்னார்.

''வாங்­கடா பேரு­வ­ளைக்கு போவம்.... அளுத்கமைக்கு போவம்..... சிங்களவர்கள் சிக்கித்தவிக்கிறார்கள். நாட்டுப்பற்றுள்ளவர்களே... வாருங்கள் போவோம்'' என்ற குரல்  கேய்ஹாமிக்கு கேட்டது.

''யாரு இப்படி கத்திக் கொண்டுவார எருமை?'' என்று கேய்ஹாமி வாசலுக்கு வந்து பார்த்தார்.

பிங்ஹாமிதானே இது.... பெரியதோர் எருமமாடு ஆகியிருக்கிறது.

'' ஏய் பிங்ஹாமி... உனக்கும்  இனவாத எருமமாடு  தாக்கிவிட்டதா?''  என்று கேய்ஹாமி கேட்டார்.

பிங்ஹாமி  வேகமாக வந்து கெய்ஹாமியை முட்டினான். ஆனாலும் கேய்ஹாமி இனவாத எருமையாக மாறவில்லை.

''ஏன் நீ இனவாத எருமையாக மாறவில்லை.... நீ இனவாத எருமையாக மாறு'' என்று  வாலைத்தூக்கி எருமை சாணத்தைப் போட்டது.

ஆயிரம் இனவாத எருமைகள் வந்து என்னை முட்டினாலும் நான் இனவாத எருமையாக மாறப்போவதில்லை  என்று  கேய்ஹாமி கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

நன்றி:அத

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham