நோன்பு அனைவர் மீதும் கடமையாகும். இந்த நோன்பை சிலர் வைக்காமல் விட்டு விடுகின்றனர். இவர் களின் நிலை என்ன? இவர்கள் என்ன செய்ய வேண்டும்? இதற்கு இஸ்லாம் சில தெளி வுகளை வழங்குகிறது.
வேண்டுமென்றே நோன்பு வைக்காதோர்?
நோன்பு வைக்கும் சூழல் இருந்தும், உடல் நிலை நல்லவிதமாக அமைந் திருந்தும், அது இறைக் கட்டளை என்பதை மறந்து, நோன்பு வைக்காமல் இருப்போர் உண்டு. இவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அது அல்லாஹ்விடம் எடுபடாது.
இது போன்றோர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். மாத விடாய் காரணமாக நோன்பை கைவிட்டோர் மீண்டும் நோற்க வேண்டும் என்று கட்டளையிட்டு வரும் ஹதீஸே இதற்கு ஆதாரம் ஆகும்.
காரணங்களுடன் நோன்பை விட்டோர்...?
நோன்பு வைக்க இயலாதவர்க ளைப் பொறுத்தவரை இரண்டு வகையினர் உண்டு.
0 நோன்பு காலத்தில் நோன்பு வைக்க இயலாத நிலை இருப்பினும் வரும் காலங்களில் சுகமாகி, மீண்டும் நோன்பு வைக்கும் நிலை உள்ள நோயாளிகள்.
0 நோன்பு காலத்திலும் நோன்பு வைக்க இயலாது. அதன் பின்பும் கூட நோன்பு வைக்க முடியாது என்ற நிலையில் உள்ள முதுமையானவர்கள்.
முதல் சாரார் விடுபட்ட நோன்பை இடைப்பட்ட காலங் களில் நோற்க வேண்டும். இரண் டாம் சாரார், நோன்பு வைக்காத நிலைக்காக அந்த நோன்புக்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உண வளிக்க வேண்டும்.
"(நோன்பு) எண்ணிக் கூறப்படும் (சில) நாட்களில் (கடமையாகும்) ஆனால் அந்நாட்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் குறிப்பிட்ட நாட்கள் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்.
இருப்பினும் நோன்பு நோற்பதை கடினமாக கருதுபவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவ ளிக்க வேண்டும் எனினும் ஒருவர் விரும்பி அதிகமாக கொடுத் தால் அது அவருக்கு நல்லது. நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர் களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மை யாகும்.(அல்குர்ஆன் 2:184)
நோன்பை விட்ட பெண்கள்...?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் இருக்கும்போது, எங்க ளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். ஆனால் விடுபட்ட தொழுகைக்காக களாச் செய்ய கட்டளையிட மாட் டார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும் நோன்பிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சலுகை தந்தனர் என அனஸ்பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா)
இது மாதிரி நோன்பை விட்ட பெண்கள் மறு ரமலான் வரும் முன் மீண்டும் நோற்க வேண்டும்.
"ரமலானில் சில நோன்பு என் மீது களாவாகிவிடும். ஷஹ்பானில் தான் அதை என்னால் மீண் டும் நோற்க இயலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே, இதற்குக் காரணம் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்.(புகாரி, முஸ்லிம்)
வைத்திருந்த நோன்பை முறித்தோர்...?
நோன்பை வேண்டுமென்றே முறித்தோர், கீழ்கண்ட முறைகளில் பரிகாரம் ஒன்றை காண வேண்டும்.
1. ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
2. தொடர்ச்சியாக இரண்டு மாதம் நோன்பு நோற்க வேண்டும்.
3. அறுபது ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
இந்த மூன்றில் ஒன்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதைச் செய்ய பொருளாதார வசதி, உடல்நிலை சரி இல்லையா னால் அவர் முறித்த நோன்பை மட்டுமேனும் நோற்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து "இறைத் தூதர் அவர்களே! நான் நாசமா கிவிட்டேன்", என்றார். ‘என்ன நாசமாகிவிட்டீர்?‘ என்று கேட் டார்கள். ரமலானில் (பகலில்) என் மனைவியிடம் உடலுறவின் ஈடுபட்டு விட்டேன் என்று கூறினார்.
ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவுக்கு உன்னிடம் பணம் உள்ளதா? என்று கேட் டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி உள்ளதா? என்று கேட்டார்கள். இல்லை என்றார். "அறுபது ஏழை களுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா? என்று கேட்டார்கள் இயலாது என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். அப்போது பதினைந்து ஸாஉ கொள்ளளவு கொண்ட ஒரு பாத் திரத்தில் பேரீத்தம் பழம் கொண்டு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தரப்பட்டது. (அதை அவரிடம் தந்து) தர்மம் செய்வீராக என்றார்கள். அவர் "என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்?" இந்த மதீனா முழுவதும் எங்களை விட ஏழை எவருமில்லை-" என்று கூறினார்.
இதைக் கேட்டதும் தமது கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள், இதைக் கொண்டு போய் உமது குடும்பத்தினருக்கு வழங்குவீராக" என்று கூறினார்கள். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக் கின்றார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
"...அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்கு பதிலாக ஒரு நோன்பு நோற்பீராக" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னுமாஜா, அபூதாவூத் நூற்களில் அதிகமாக பதிவாகி உள்ளது.
அல்லாஹ் மிக அறிந்தவன்!
Post a Comment