இன முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸே காரணம் - ஞானசார தேரர்
Thursday, July 3, 20140 comments
நாட்டில் இன முரண்பாடுகள் ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே காரணம் என பொதுபல சேனா தீவிரவாத இயக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.
அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயற்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் இடம்பெற்ற விசாரணைகளில் பங்கேற்று திரும்பியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா நாட்டின் நலனுக்காக வெளியிடும் கருத்துக்களை நிறுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் பேருவளை, அளுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு யார் பொறுப்பு சொல்ல வேண்டும் என்பதனை பல்வேறு தரப்பினரும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
Post a Comment