ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு தொடர்ந்தும் நீடிக்குமானால் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும். நாட்டில் இன ஒற்றுமையை பார்க்க முடியாது. சட்டம் ஒழுங்குகள் சீர்குலைந்து இன ரீதியாகவும் மத ரீதியாகவும் மக்கள் பிரிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் சந்தேக கண்கொண்டு பார்க்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று ஐ.தே.கட்சி மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்குகின்ற சில பௌத்த இனவாத அமைப்புக்களால் இன்று இன ஒற்றுமையற்ற நாடாக இலங்கை மாறி வருகின்றது.
இந்த அரசாங்கத்தின் மீது சிங்கள மக்கள் கூட நம்பிக்கை இழந்துள்ளார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் கூட தங்களின் படிப்புக்காக வேண்டி இந்த அரசிடம் போராடி தங்களது உரிமைகளைப் பெறக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நாட்டு மக்கள் சொல்ல முடியாத வேதனைகளுடன் இருக்கின்றார்கள். தேர்தல் ஒன்று வருமேயானால் இந்த அரசாங்கத்துக்கு நல்ல பாடம் புகட்ட காத்திருக்கின்றார்கள். நடைபெறவிருக்கின்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மஹிந்த அரசு மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொள்வதற்கு எச்சரிக்கையாக அமையும்.
தருணம் வரும் வளர மக்கள் பொறுமை காக்க வேண்டும். எல்லோரும் ஒன்றிணைந்து ஐ.தே.கட்சியை பலப்படுத்தி நாட்டின் சட்டம் ஒழுங்குகளை நிலை நாட்டுவதற்கு முன்வர வேண்டும் என்றார்.
Post a Comment