மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் மதவன்முறைகளில் பலர் பலி

Friday, July 4, 20140 comments


மியன்மாரில் மூன்றாவது நாளாக நீடிக்கும் மதக்கலவர வன்முறையில் நேற்றுமுன்தினம் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் முஸ்லீம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான வன்முறைகளில் இந்த இரு உயிர்பலிகள் நடந்திருக்கின்றன.
நகரில் சுற்றித்திரிந்த புத்த மத குழுக்கள் கடைகள், வாகனங்கள் மற்றும் பள்ளிவாசல்களை அடித்து நொறுக்கியதை தடுக்க நூற்றுக்கணக்கான காவலர்கள் நகரில் பாதுபாக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நகரின் தற்போதைய மதக்கலவர வன்முறைகள் புதன் கிழமை இரவு துவங்கின. இரண்டு முஸ்லீம் ஆண்கள் ஒரு புத்த மதத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து இந்த வன்முறைகள் ஆரம்பித்தன. முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு பள்ளிவாசலும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.

சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை போலிசார் தடுத்தனர். முஸ்லீம் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று பௌத்தர்கள் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

மியன்மாரின் மேற்குப் புற மாகாணமான ரக்கைன் மாகாணத்தில், கடந்த மூன்றாண்டுகளாகவே, பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்துக்கும் இடையே மதரீதியான வன்செயல்கள் நடந்து வந்திருக்கின்றன.

இந்த மோதல்களில் 2012ம் ஆண்டில் மட்டும், ரக்கைன் மாகாணத்தில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்..
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham