அளுத்கம: இராணுவத்தினரின் மீள்கட்டுமான பணிக்கு தடை விதிப்பு
Friday, July 4, 20140 comments
அளுத்கம மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் இராணுவத்தினரின் மீள்கட்டுமான பணிக்கு களுத்துறை நீதிவான் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையை விதித்துள்ளது.
அத்துடன் குறித்த வன்முறைகளில் உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரிக்கும் நீதவான் அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
குறித்த வன்முறையின் போது உயிரிழந்த இருவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று களுத்துறை மேலதிக நீதவான் ஆய்ஷா ஆப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது உயிரிழ்ந்த இரு நபர்களின் சார்பிலும் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு மேலகதிகமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலவர் உபுல் ஜயசூரிய தலமையிலான விஷேட சட்டத்தரணிகள் குழு மன்ரில் ஆஜரானது.
இதில் சட்டத்தரணி உபுல் ஜயசூரியவுக்கு மேலதிகமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன சட்டத்தரணி பந்துல வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் ஆஜராகியிருந்தனர்.
இதன் போது மன்றுக்கு விஷேட வேண்டுகோள் ஒன்றை முன்வைத்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலவர் உபுல் ஜயசூரிய உள்ளிட்ட குழுவினர் கடந்த மாதம் 15ம் திகதி அளுத்கம மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வன்முறைகளின் போது இருவர் உயிரிழந்தும் 120 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வுப் பிரிவினர் அங்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டினார்.
இதனைவிட குறித்த வன்முறைகளில் உயிரிழந்தவர்களில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அதனால் குறித்த இரு ஜனாஸாக்களையும் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
அத்துடன் இவ்விரு இளைஞர்களும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இடம் மட்டுமல்லாது எரிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் அரச இரசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதனால் அந்த இடங்களில் உடனடியாக அரச இரசாயன பகுப்பாய்வுகளுக்கு உடன் உத்தரவு பிறப்பிப்பதுடன், அந்த இடங்களில் மட்டும் தற்போதைக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்கு தற்காலிகமான தடை உத்தரவொன்றை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தினரால் மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிவான் ஆய்ஷா ஆப்தீன், அரச இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக கூறப்படும் இடம், தீயினால் சேதமடைந்த கடைகள் மற்றும் வீடுகளில் மீள் கட்டுமான நடவடிக்கைகளை தொடர இராணுவத்தினருக்கு தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன் எதிர்வரும் 31ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிவான் அன்றைய தினம் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை மன்றில் சமர்பிக்குமறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் வன்முறைகளில் உயிரிழந்த மொஹம்மட் ஸஹ்ரான் மற்றும் மொஹம்மட் சிராஸ் ஆகியோரின் மரணம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரியையும் அன்றைய தினம் மன்ரில் ஆஜராகுமாறு நீதிவான் அழைப்பாணை பிறப்பித்தார்.
நேற்றைய வழக்கு விசாரணைகளில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணிகளான ஹஸ்ஸாலி ஹுசைன்,எம்.சால்மான், சப்ராஸ் ஹம்சா, ரமீஸ் பசீர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment