இலங்கை பாகிஸ்தான் நட்புறவு அமைப்பினால் இஸ்லாமியரின் நோன்பு பெருநாளை முன்னிட்டு ரமழான் மற்றும் ஈத் வர்த்தக சந்தை எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இலக்கம் 07 லிலி அவனியூவில் அமைந்துள்ள குளிரூட்டப்பட்ட இஸ்லாமிய கலாசார இல்லம் நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவினை பலப்படுத்தும் நோக்கிலேயே இவ் வர்த்தக சந்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ் வர்த்தக சந்தை 5ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் நடத்தப்பட்ட வியாபாரச் சந்தை மிக வெற்றிகரமாக நடைபெற்றது என்றும் இம்முறையும் அவ்வாறே அமையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் வியாபாரச் சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வர்த்தகச் சந்தையில் சுவையான உணவுகள், சட்னி, ஊறுகாய், ஒப்பனைப்பொருட்கள், வாசனைத்திரவியங்கள், விளையாட்டுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்கான ஆடைகள் என அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வர்த்தக சந்தைக்கு 4000 க்கும் அதிகமானவர்கள் வருகைத்தருவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விற்கப்படும் டிக்கெட்டுக்கள் மூலம் தெரிவு செய்யப்படும் அதிஷ்டசாலிகளுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளன.
Post a Comment