நாட்டின் முஸ்லிம்களை பாதுகாக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் ஒன்றான முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவா குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தென் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் குறித்து பொதுச் செயலாளர் கவனம் செலுத்தி வருவதாக, அவரது பேச்சாளர் ஸ்டிபென் டுஜாரிக் Stephane Dujarric தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் விரிவான விசாரணை நடத்தி எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு வட அமெரிக்காவிற்கான இலங்கை முஸ்லிம் பேரவை, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரிடம் கோரியுள்ளது,

Post a Comment