முஸ்லிம் வலயமொன்றை ஏற்படுத்தடி பயங்கரவாதத்தை கொண்டுவர முயற்சி - ஹெல பொது சவிய

Friday, July 4, 20140 comments


மன்னார் - வில்பத்து இடையே முஸ்லிம் வலயமொன்றை ஏற்படுத்தி இந்தியா வழியாக இலங்கைக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் போதைப்பொருட்களையும் கொண்டு வருவதற்கான திட்டம் இங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்படுவதாக பௌத்த அமைப்பான "ஹெல பொது சவிய” குற்றம் சாட்டியுள்ளது.

காதியாவத்தை என்ற சிங்களப் பெயரை பலாத்காரமாக   தர்கா நகர் என சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவ் அமைப்பு தெரிவித்தது.

கொழும்பு 7 இலுள்ள அகில இலங்கை பௌத்த  மகா சம்மேளன கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற "ஹெல பொது சவியவின்” ஊடகவியலாளர்  மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், இலங்கையில் புத்தளம், காத்தான்குடி, கல்முனை போன்ற பல்வேறு நகரங்களில் அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.

கடந்த காலங்களில் தம்புள்ளை பிரதேசத்தில் கான்ஸ்டபிள்  ஒருவர் கொல்லப்பட்டமை  கிறிஸ் பேய்களின் அட்டகாசம் எல்லாம் இந்த அடிப்படைவாத சக்திகளின் விளையாட்டுக்களாகும்.
வெலிகமவில் முஸ்லிம் அடிப்படைவாத பள்ளிவாசலுக்கும் இன்னொரு பள்ளிவாசலுக்கும் இடையே ஒலிபெருக்கி பிரச்சினையொன்று காணப்பட்டது.

அத்தோடு, அளுத்கமவில் பிக்கு ஒருவர் தாக்கப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிங்கள பௌத்தர்களும் பாதிக்கப்பட்டார்கள்.

ஆனால், இவையெதனையும் ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. அதைவிடுத்து உலகம் முழுவதும் சிங்களவர்கள் காவியுடை தரித்த பௌத்த குருமார் பயங்கரவாதிகள் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது இது அநீதியாகும்.

பிக்குமார் தொடர்பான செய்திகள் முதல் பக்கத்தில் வருகின்றன. ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அடாவடித்தனங்கள் முதல் பக்க செய்திகளாக  வருவதில்லை.

மன்னார்

இன்று வில்பத்து - மன்னாருக்கு இடையே முஸ்லிம் வலயமொன்றை ஏற்படுத்தி இந்தியா
ஊடாக முஸ்லிம் பயங்கரவாதிகளையும் போதைப்பொருட்களையும் வேறு சட்டவிரோதமான பொருட்களையும் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் இங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் பிரதேசங்களில் டாக்டர்கள் தாதிகளாக பணி புரியும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பர்தா உடை அணிய அனுமதி கோரியுள்ளனர்.

பாடசாலைகளிலும் முகத்தை மூடிய உடை அணியப்படுகின்றது. உலகில் பல நாடுகளில் இவ் உடை தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

அது மட்டுமல்லாது முஸ்லிம்கள் தமிழர்களுக்கென தனித்தனிச் சட்டங்கள் உள்ளன. இவையனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்.

நாட்டில் ஒரேயொரு சட்டம் தான் அமுலில் இருக்க வேண்டுமென்றும் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

இந்து ராகாரே தர்மரத்ன தேரர்

மாலைதீவு உட்பட பல்வேறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தோர் உல்லாசப் பிரயாணிகள் விசாவில் இங்கு குடும்பங்களாக வந்து இரகசியமாக வாழ்ந்து வருகின்றனர்.

புத்தளம் சாய்ந்தமருது மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்றனர். இது தொடர்பாக அரசாங்கம் விசாரணை செய்ய  வேண்டும்.

தம்புள்ளை கூரகல  வில்பத்து பிரதேசங்களில் பௌத்த புராதனச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. அதற்காக பொதுபலசேனா, சிஹல ராவய போன்ற பௌத்த அமைப்புகள் குரல் கொடுக்கின்றன.

இப்பிக்குமார் கடும் தொனியில் குரல் கொடுப்பதையே எதிர்க்கின்றவர்கள் விமர்சிக்கின்றார்கள். ஆனால் உண்மையில் சிங்கள பௌத்தர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விமர்சிப்பவர்கள் பேசுவதில்லை.

மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

காதியவத்தை என்ற சட்டவிரோதமான சிங்களப் பெயரே 1970களில் சட்டவிரோதமாக தர்காநகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எண்டேறுமுல்லை அக்பார் டவுணாக பெயர் மாறியுள்ளது. இவ்வாறு சிங்களப் பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக மாற்றம் பெற்றுள்ளன.

நாட்டுக்குள் தலைதூக்கும் முஸ்லிம் அடிப்படைவாதத்தை தடுத்து அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அகலகட ஸ்ரீசுமண தேரரும் கலந்து கொண்டார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham