நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Thursday, July 3, 20140 comments
மேலும் 24 மணித்தியாலத்திற்கு தொடர்ந்து மழை பெய்யுமாக இருந்தால் மண்சரிவு- கற்பாறை சரிவு- மற்றும் மலைச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றதென்றும் எனவே அது தொடர்பில் கவனமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மண்சரிவு ஆய்வு மற்றும் அறிவுறுத்தல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை- அம்பகமுவ கோரலே- கந்து பேவும் மற்றும் பூண்டுலோயா- தலவாகலை பாதை- நுவரெலியா- ஹெட்டன் பாதை உட்பட அனைத்து பாதைகள்- நோடன் பிரிஜ் மற்றும் காசல்ரீ ஆகிய பிரதேசங்களின் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறதென்று அப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோன்று கேகாலை மாவட்டத்தின் கேகாலை- தெரனியகல- யட்டியந்தோட்டை- புலத்கொஹுபிட்டிய- தெஹிஓவிட்ட- ருவன்வெல்ல பிரதேசய செயலகப்பிரிவு - கண்டி மாவட்டத்தின் அனைத்த பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கண்டி - மஹியங்கன பாதை உட்பட ஏனைய பாதைகள்- களுத்தறை மாவட்டத்தின் கலவத்த- மத்துகம- பாலிந்தநுவர- வலல்லாவிட்ட- புலச்சிங்கல- ஹொரன பிரதேச செயலகப் பிரிவு ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறதென்றும் தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரியின் எஹெலியகொட- அலபாத- கலவான- அயகம- இரத்தினபுரி- பலங்கொட- கஹவத்த- நிவித்திகல பிரதேச செயலகப் பிரிவு பிரதேசங்களில் உள்ள மக்களும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வறிவுறுத்தல் இன்றைய தினம் (03) இரவு 10.00 மணி வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் மண்சரிவு ஆய்வு மற்றும் அறிவுறுத்தல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment