அளுத்கம தர்கா நகர் போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஓட்டமாவடியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட போது அரச சொத்துக்களுக்கு சேதங்களை எற்படுத்தி அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 19 ஆம் திகதி அன்று ஓட்டமாவடியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட போது உதுமா லெப்பை பர்ஹான் என்பவர் இலங்கை போக்குவரத்து பயணிகள் பஸ் மற்றும் வைத்தியசாலை கண்ணாடிகளை கல்லால் எறிந்து சேதமாக்கியதுடன் வாழைச்சேனை சந்தையின் பாதுகாப்பு ஊழியர் ஒருவரையும் தாக்கியமைக்காக இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன் போது எதிர்வரும் 23 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment