மியன்மாரில் மீண்டும் முஸ்லீம்கள் மீது பௌத்தர்கள் தாக்குதல்
Wednesday, July 2, 20140 comments
மியன்மாரின் (பர்மா) இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு பள்ளிவாசலும் கடும்போக்கு பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை பொலிஸார் தடுத்தனர்.
முஸ்லிம்களில் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று பௌத்தர்கள் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் கூறுகின்றன.
பர்மாவின் மேற்குப் புற மாகாணமான ரக்கைன் மாகாணத்தில், கடந்த மூன்றாண்டுகளாகவே, பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்துக்கும் இடையே மதரீதியான வன்செயல்கள் நடந்து வந்திருக்கின்றன.
இந்த மோதல்களில் 2012 ஆம் ஆண்டில் மட்டும், ரக்கைன் மாகாணத்தில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
Post a Comment