'தற்காத்துக் கொள்ளும் உரிமை' முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது!

Sunday, July 6, 20140 comments


அஷ்ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

அளுத்­கம, தர்கா நகர், பேரு­வல,துந்­துவ,வெலிப்­பன்ன, அம்­பே­பி­டிய, சேன­வத்த,வெளி­பி­டிய,பாணந்துறை போன்ற இடங்­களில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட காடைத்­த­னங்கள், காட்­டு­மி­ராண்­டித்­த­னங்­களின் அரங்­கே­ற்றங்­க­ளுக்கு முன்­னரும் பின்­னரும் இடம்­பெ­று­கின்ற நகர்­வுகள், நிகழ்­வு­களில் இருந்து சக­லரும் கற்றுக் கொள்ள வேண்­டிய பாடங்கள் ஏரா­ள­மாக இருக்­கின்­றன. அதே­வேளை சமூ­கத்தின் எல்லா அங்­கங்­களும் பரஸ்­பரம் ஒத்­து­ழைப்­பு­டனும் அவ­தா­னத்­து­டனும்  செயற்­பட வேண்­டிய மிகவும் நெருக்­க­டி­யான ஒரு கால­கட்­டத்தில் நாம் இருந்து கொண்­டி­ருக்­கின்றோம்.

இந்த நாட்டில் அடுத்த சமூ­கங்­களை விட எந்த விதத்­திலும் குறை­வில்­லாத சம உரி­மையும் அந்­தஸ்த்தும் முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்­றது. இந்த நாடு இங்கு வாழும் சக­ல­ருக்கும் சொந்­த­மா­னது. முஸ்­லிம்­களை இரண்டாம் தரப் பிர­ஜை­க­ளாக நடாத்த விரும்பும் தீய சக்­திகள் தவ­றி­ழைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நாட்டின் சுதந்­திரம், ஆள்­புல ஒரு­மைப்­பாடு, சுயா­தி­பத்­தியம், சமா­தான சக­வாழ்வு, பொரு­ளா­தார சுபீட்சம் என்­ப­வற்­றிற்கு முஸ்­லிம்கள் வர­லாறு நெடு­கிலும் பாரிய பங்­க­ளிப்­புக்­களை செய்­துள்­ள­தோடு விலை­யையும் செலுத்­தி­யுள்­ளார்கள்.

தேசப்­பற்­றுடன் வாழும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வெறுப்புப் பிர­சா­ரத்தை மேற்­கொள்ளும் இந்த தீய சக்­திகள் யாவும் பிராந்­திய மற்றும் சர்­வ­தேச சக்­தி­க­ளிடம் தேசத்தின் ஒரு­மைப்­பாட்­டையும் சமா­தான சக­வாழ்­வையும் சுயா­தி­பத்­தி­யத்­தையும் பொரு­ளா­தார சுபீட்­சத்­தையும் அடகு வைத்து அர­சியல் சது­ரங்க சூதாட்­டத்தில் ஈடுபட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த உண்­மையை பெரும்­பான்­மை­யான சிங்­கள பௌத்த மக்கள் அறிந்து வைத்­துள்­ளார்கள்.
தமிழ்த் ­தே­சிய அர­சியல் இன்று தேசிய, பிராந்­திய, சர்­வ­தே­சிய, பூகோள அர­சியல் இராஜதந்­திர இரா­ணுவ நகர்­வு­க­ளுக்­காக கையா­ளப்­ப­டு­வது போல் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளையும் அத்­த­கைய நகர்­வு­க­ளுக்­காக பலிக்­க­டா­வாக்­கின்ற முஸ்­தீ­பு­களும் கெடுபிடி­க­ளுமே கூலிப் படை­களைக் கொண்டு அரங்­கேற்றப்படு­கின்­றன.

எந்­தெந்த மேலா­திக்க சக்­தி­களின் தேவைக்­காக "இஸ்­லா­மோ­போ­பியா" (இஸ்லாம் குறித்த பீதியும் முஸ்­லிம்கள் குறித்த அச்­சமும்) கூலிப்­ப­டை­களால் இந்த நாட்டில் சந்தைப்படுத்தப்படு­கின்­றது? ஏன் அதற்­காக பெரும்­பான்மை இனத்­த­வரின் பௌத்த சமய சாயம் பூசப்படு­கின்­றது? அத்­த­கைய தீய சக்­தி­க­ளூ­டாக தத்­த­மது நலன்­களை காத்துக் கொள்­வ­தற்கும் எரி­கின்ற தீயில் குளிர்­காய விரும்­பு­கின்ற சக்­திகள் யாவை? என்­ப­த­னையும் நாங்கள் அறிவோம்.

இத்­த­கைய சதி­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து இன்­னு­மொரு முறை தேசத்­தையும் சமூ­கத்­தையும் மீட்­டெ­டுக்­கின்ற பணியை முஸ்லிம் சமூகம் தேசத்தின் ஏனைய முற்­போக்கு சக்­தி­க­ளுடன் கைகோர்த்து தோளோடு தோள் நின்று செய்யும். சமா­தான சக வாழ்­விற்­கான அனைத்து முன்­னெ­டுப்­புக்­க­ளையும் மும்­மு­ர­மாக மேற்­கொள்ளும். முஸ்லிம் சமூகம் உச்சக் கட்ட பொறு­மையை கடைப்­பி­டிப்­பதும் விட்டுக் கொடுப்­புக்­களை செய்­வதும் அவர்­க­ளது இய­லா­மை­யா­கவோ கோழைத்­த­ன­மா­கவோ எடை­போ­டப்­ப­டு­மாயின் அது மிகப் பெரும் வர­லாற்றுத் தவ­றாகும்.

தேசத்தின் எந்த ஒரு பிர­ஜைக்கும் சமூ­கத்­திற்கும் இருக்­கின்ற "தங்­களை தற்­காத்துக் கொள்ளும் உரிமை" முஸ்­லிம்­க­ளுக்கும் எந்த விதத்­திலும் குறை­வில்­லாமல் இருக்­கின்­றது.


ஒவ்­வொரு முஸ்லிம் ஊரிலும் அவ்­வப்­ பி­ர­தே­சங்­களில் உள்ள பள்­ளி­வாயல் நிர்­வா­கத்­தினர் உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள், வர்த்­த­க ­ச­மூ­கத்­தினர், அர­சியல் பிர­மு­கர்கள், இளை­ஞர்கள், இஸ்­லா­மிய இயக்­கங்­களின் தரீக்­காக்­களின் பிர­தி­நி­திகள், பாட­சாலை சமூ­கத்­தினர் என சகல தரப்­புக்­க­ளையும் கொண்ட ஷூரா சபை­களை அவ­ச­ரமும் அவ­சி­ய­மு­மாக தோற்­று­வித்துக் கொள்ளல் வேண்டும். குறைந்த பட்சம் புனித ரம­ழா­னுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமை­வது அவ­சியம்..!

ஒவ்­வொரு ஊரி­னதும் பாது­காப்பு குறித்து தேசிய அர­சியல், சிவில் மற்றும் சன்­மார்க்கத் தலை­மை­களை மாத்­திரம் ஒருபொழுதும் நம்­பி­யி­ருக்க முடி­யாது என்­ப­தனை முஸ்லிம் சமூ­கத்­திற்கு புதி­தாக  புரிய வைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. நேரடி விஜ­யங்கள், பார்­வை­யி­டல்கள், அறிக்கை வெளி­யி­டல்கள், உயர்­மட்ட கவனயீர்ப்­புகள், ஊடக பிர­பல்­யங்­க­ளுக்கு அப்­பாலும் முன்­னரும் பின்­னரும் உள்ளூர் தலை­மைகள் கவ­னத்திற் கொள்ள வேண்­டிய விவ­கா­ரங்கள் ஏராளம் உள்­ளன.

பிரச்­சி­னைகள் ஏற்­ப­டும்­பொ­ழுது சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் காவல் துறை­யி­னரை, சட்ட மற்றும் நீதித் துறை­யி­னரை அணு­குதல், பிராந்­தி­யத்தில் உள்ள முஸ்லிம், முஸ்லிம் அல்­லாத அர­சியல் தலை­மை­களை அணு­குதல் போன்ற இன்­னோ­ரன்ன விவ­கா­ரங்­களை நிதா­ன­மாக கலந்­தா­லோ­சித்து உகந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்தல் அவ­சி­ய­மா­ன­தாகும்.

குறிப்­பாக சட்டம், ஒழுங்கு, நீதித்­துறை என்று வரும்­பொ­ழுது சட்­டத்­த­ர­ணி­களின் சேவை­களை பெற்­றுக்­கொள்தல். அதே­போன்று இன்­னோ­ரன்ன நட­வ­டிக்­கை­க­ளுக்­கான செல­வி­னங்­களை எதிர்­கொள்­வ­தற்­கான நிதியம் ஒன்றும் ஏற்­ப­டுத்திக் கொள்ளப்படல் வேண்டும்.

தேசிய அளவில் இஸ்­லா­மிய அமைப்­புக்கள், தரீக்­காக்கள், முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள், சமூக ஆர்­வ­லர்கள், பல்­கலைக் கழக சமூ­கத்­தி­னர், துறைசார் நிபு­ணர்­களைக் கொண்ட தேசிய ஷூரா சபை அமையப் பெற்­றி­ருந்­தாலும் கிராம மட்ட, மாவட்ட மட்ட ஷூரா சபை­களை தோற்­று­வித்து தேசிய வலை­ய­மைப்பை உரு­வாக்கிக் கொள்­வதற்கும் சமூக விவ­கா­ரங்­களை சகல தரப்­பி­னரும் ஒன்­றி­ணைந்து கையாள்­வ­தற்கும் சக­லரும் பார்­வை­யா­ளர்­க­ளாக, விமர்­ச­கர்­க­ளாக அன்றி பங்­கா­ளி­க­ளாக மாறுதல் வேண்டும்.

வேற்­று­மை­க­ளுக்கு மத்­தி­யிலும் சமூ­கத்தின் இருப்பு பாது­காப்பு உரி­மைகள் விட­யத்­திலும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிலும் சமா­தான சக­வாழ்­விலும் எமது கூட்டுப் பொறுப்பை உணர்ந்து நாம் அனை­வரும் கடமை உணர்­வுடன் செயற்­படல் வேண்டும்.

வெளி­நா­டு­களில் வசிப்போர்,புலம் பெயர் சமூ­கத்­தினர் சக­லரும் தத்­த­மது பிர­தே­சங்­க­ளிலும் தேசிய அள­விலும் மேற்­கொள்ளப்படு­கின்ற முயற்­சி­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்­பையும் உத­வி­க­ளையும் வழங்­குதல் வேண்டும். உள்­நாட்டு சிவில் சன்­மார்க்க அர­சியல் தலை­மை­களை கலந்­தா­லோ­சித்த பின்­னரே அவர்கள் தமது செயற்­பா­டு­களை திட்­ட­மிட்டுக் கொள்ள வேண்டும்.
பெரும்­பான்மை சமூ­கத்தில் உள்ள நல்ல சக்­திகள், முற்­போக்கு அர­சியல் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளுடன் இணைந்து தேசிய விவ­கா­ர­மா­கவே இந்த விவ­கா­ரங்­களை நாம் சம­யோ­சி­த­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் கையாள வேண்­டிய கடப்­பாட்டில் இருக்­கின்றோம் என்­ப­தனை உணர்ந்து செயற்­படல் அவ­சி­ய­மாகும்.

கடந்த சனிக்­கி­ழமை அதி­காலை தேசிய ஷூரா சபை பிர­தா­னிகள், செய­லக உறுப்­பி­னர்கள் மற்றும் முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் சங்க பிர­தா­னி­க­ளுடன் அளுத்­கமை பேரு­வலை தர்­கா­நகர் மற்றும் பாதிக்­கப்­பட்ட கிரா­மங்­க­ளுக்கு விஜயம் செய்த பொழுது  பல்­வேறு உண்­மை­களை அறியவும் அவதானிக்கவும் முடிந்­தது.

குறிப்­பாக குறு­கிய இராக்­கால இடை­வெ­ளிக்குள் எதிர்­பா­ரா­தவி­த­மாக ஏற்­பட்ட ஒரு கல­வ­ர­மாக அன்றி மிகவும் நன்­றாக முன்­னேற்­பா­டு­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட்ட காட்­டு­மி­ராண்டித் தன­மான தாக்­கு­தல்­க­ளா­கவே ஏற்­பட்­டுள்ள சேதங்கள், தட­யங்கள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் மூல­மாக பொலிஸில் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பா­டுகள், மற்றும் பொது­மக்­களின் வாக்கு மூலங்கள் உணர்த்­து­கின்­றன.

துர­திஷ்டவச­மாக இன்­னும் ­பலர் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு சென்று முறை­யீ­டு­களை செய்ய முன்­வ­ர­வில்லை. முறை­யீ­டு­களை சட்ட ஆலோ­ச­னை­க­ளுடன் தாம் எழுதிச் சென்று பொலிஸ் நிலை­யத்தில் சமர்ப்­பித்து பதிவு செய்து பிர­தி­களை அல்­லது முறை­யீட்டு இலக்­கத்தை வைத்­துக்­கொள்ள முடியும். கடந்த வெள்ளியன்று இது குறித்து ஊர் மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.  

எந்தவொரு தீய சக்தியையும் அஞ்சி வாழவோ அல்லது கெஞ்சி வாழவோ வேண்டிய தேவை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு கிடையாது.முஸ்லிம்கள் இநத நாட்டில் சம உரிமையும் சம அந்தஸ்துமுள்ள பிரஜைகள். நாம் ஒரு அடிமைச் சமூகம் அல்ல. நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.இன்ஷா அல்லாஹ்..

தேசப்பற்றுள்ள முற்போக்கு சக்திகள், மிகப் பெரும்பான்மையான நல்ல சக்திகளுடன் இணைந்து தேசத்துரோகத்தில் ஈடுபட்டுள்ள தீய சக்திகளுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். காட்டுமிராண்டித் தனங்கள், அடைவுகளோ  வெற்றிகளோ அல்ல. அவை கோழைத்தனங்கள்.தேசத்தினதும் துரோகிகளினதும் மனச் சாட்சியை உறுத்துகின்ற சாபக்கேடான தோல்விகள்...!
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham