ஜனாதிபதியின் இப்தார் பதுளையில்? முஸ்லிம்கள் கஞ்சுக்கோப்பைக்கு ஏமாற மாட்டர்கள் - முஜிபுர்
Thursday, July 3, 20140 comments
ஜனாதிபதியின் இப்தார் இம்முறை பதுளையில் நடத்தப்படலாம் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊகம் வெ ளியிட்டுள்ளார்.
ஊவா மாகாண சபை தேர்தலை இலக்காக கொண்டே இவ்வாறு பதுளையில் இப்தாருக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் கண்டியில் இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் ஜனாதிபதி. மத்திய மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து குறித்த இப்தார் இடம்பெற்றது. கண்டி முஸ்லிம்களுக்கு பிரியானியயும் கஞ்சுக் கோப்பையையும் கொடுத்து ஏமாற்றலாம் என ஜனாதிபதி நினைத்திருந்தார். எனினும் அது பலிக்கவில்லை. இந்நிலையில் இம்முறை பதுளையில் ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை நடத்தி அங்கும் மக்களுக்கு கஞ்சுக்கோப்பையை கொடுத்து ஏமாற்ற நினைக்கலாம் என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்
Post a Comment