குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் கைது செய்யுமாறு பொதுபல சேனா இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுபல சேனா இயக்கத்தனி பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அலுத்கம வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி அமைச்சர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த வன்முறைகளுக்கு பொதுபல சேனாவே காரணம் என குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அலுத்கம சம்வத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை கண்டறியாது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அலுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் துரதிஸ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அலுத்கம சம்பவத்தினால் ஏற்பட்ட பாதக விளைவுகள் எம்மை கைது செய்வதனால் தீருமானால், எங்களை கைது செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment