பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சி அனுப்பி வைத்து எச்சரிக்கை:-
Tuesday, July 1, 20140 comments
பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சி அனுப்பி வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டே பகுதியில் உள்ள பள்ளி வாசல் ஒன்றிற்கே இவ்வாறு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்துடன் பன்றி இறைச்சி துண்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உயர் பாதுகாப்பு வலயத்தில் பள்ளி வாசல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக புனர்நிர்மானப் பணிகளை நிறுத்துமாறும் கோரி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர் ஒருவரினால் இந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், பள்ளிவாசல் நிர்வாகம் சம்பவம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
Post a Comment