அளுத்கம, பேருவளை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை நோக்கும்போது நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாத அமைப்பொன்று மறைமுகமாக உருவாகுவதை அவதானிக்க முடிகின்றது என முன்னாள் போக்குவரத்து பிரதியமைச்சர் எல்.எம். பாருக் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அளுத்தம, பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களைபோல் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.தே.க. ஆட்சி காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு இன்று மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வலுவிழந்துள்ளது. ஆரம்பத்திலேயே இனவாதங்களை தடுத்திருந்தால் இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் முகம்கொடுத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.
அளுத்கம - பேருவளை பகுதி அசம்பாவிதங்களால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசை சார்ந்தது. அதனை புரிந்து கொண்டு செயற்படுமாயின் நாட்டில் தலைவிரித்தாடும் இனவாதத்தை ஒழிக்க முடியும் என்றார்.

Post a Comment