1915இல் இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரங்களின் போது கைது செய்யப்பட்ட சிங்களவர்களை விடுவித்து அவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொடுத்தவர் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் ஆவார். அன்றும் சிங்களத் தலைவர்கள் இன்று போன்று சிங்கள பெளத்தர்களின் மீதே குற்றம் சுமத்தினார்களென பெளத்த அமைப்பான ஹெல பொது சவிய தெரிவித்தது.
பிரதமர் ஒரு ''ஜோக்கர்'' பெளத்த சாசனத்தின் உயர்வுக்கு அவர் எதனையும் செய்யவில்லையென்றும் அவ்வமைப்பு தெரிவித்தது.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ''ஹெல பொதுசவிய'' அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
இங்கு உரையாற்றிய மெதகம தம்மானந்த தேரர்
அளுத்கம அசம்பாவிதங்களுக்கான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் சிங்கள பெளத்தர்கள் மீதும் பிக்குமார் மீதுமே சுமத்தப்படுகின்றன.
இதற்கு ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களும், எதிர்க்கட்சிகளும் 'ஒத்து ஊதுகின்றன''.
இதேபோன்றுதான் 1915இல் சிங்கள முஸ்லிம் கலவரத்தின்போதும் சிங்களத் தலைவர்கள் நடந்து கொண்டனர்.
ஆனால் அன்று சேர். பொன்னம்பலம் இராமநாதன் கைது செய்யப்பட்ட சிங்களவர்களை விடுவித்து நஷ்ட ஈடும் பெற்றுக்கொடுத்தார்.
கம்பளையில் அன்று இடம்பெற்ற கலவரத்திற்கு கொழும்பிலிருந்த சிங்களத் தலைவர்களே கைது செய்யப்பட்டனர்.
இன்றும் இதேநிலைதான் நிலவுகிறது.
அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் தம்புள்ளையில் புத்தர் சிலையை அகற்றுமாறு ''யுனெஸ்கோவுக்கு'' கடிதம் அனுப்பியிருந்தார்.
அரசியலமைப்பில் பெளத்த தர்மம் பாதுகாக்கப்பட்டு போதிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் இப்பொறுப்பை நிறைவேற்றவில்லையென்றும், மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
தர்மரத்ன தேரர்
பிரதமர் பெளத்த சாசன மத அலுவல்கள் அமைச்சு பதவியை வகிக்கின்றார். ஆனால் பெளத்தத்திற்காக எதனையும் செய்யவில்லை.
பிரதமர் ஒரு ஜோக்கராகவே காணப்படுகிறார் என்றார்.

Post a Comment