புனரமைப்புப் பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி பேருவளை விஜயம்!
Tuesday, July 1, 20140 comments
அளுத்கமை, பேருவலை பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என்பன இராணுவப்படையினரால் மீள புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
பத்திராகொடை ,தர்கா நகர் ,மீரச்சிகந்தை, வராப்பிட்டிய ,அளும்கமை ஆகிய பகுதிகளுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு பனரமைப்பு வேலைகளை பார்வையிட்டார்.
இப்பகுதி சிங்கள, முஸ்லிம் மக்களைச் சந்தித்த ஜனாதிபதி அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்தார்.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன ,ரோஹித அபேகுணவர்த்தன, புனரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் உபய மெதவெல ஆகியோரும் ஜனாதிபதியுடன் அப்பகுதிகளுக்குச் சென்றிருந்தனர்.
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவருமான ரணில் விக்கிரம சிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஸிம், எம்.எச்.ஏ.ஹலீம், திஸ்ஸ அத்தநாயக்க, ஆர். யோகராஜன், அஜித் பி. பெரேரா, ரோசிசேனாநாயக்க, விஜயகலா மகேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இப்திகார் ஜெமீல், பைரூஸ் ஹாஜியார், எஸ்எம். மரிகார் உட்பட பலரும் சென்றிருந்தனர். அத்தோடு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவிரப்பெரும அசம்பாவிதங்கள் இடம்பெற்றபோது மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான கருஜயசூரிய, மங்கள சமரவீர, ஹெரான் விக்ரமசிங்க மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகே, லாபிர் ஹாஜியார் ஆகியோரும் சென்றிருந்தனர். அத்தோடு ஜூன் மாதம் 16 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது கருஜயசூரிய, ஹர்ஷ த சில்வா, திஸ்ஸ அத்தநாயக்க, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் சென்ற போது அவர்கள் அங்கு செல்லவதை கடும்போக்காளர்கள் தடுத்து நிறுத்தியமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment