இஸ்லாமியர்களுக்கான தனி இராட்சியம் பிரகடனம்
Tuesday, July 1, 20140 comments
ஜிஹாத் போராளிக்குழுவொன்று இஸ்லாமியர்களுக்கான தனி இராட்சியம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய போராளிகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள ஈராக் மற்றும் சிரியாவில் இந்த பிரகடனம் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தனி இராட்சியத்தின் தலைவராக அபு பக்கர் அல்-பாக்ஹாடடி திகழ்வதுடன், உலகளாவிய முஸ்லீம்களின் தலைவராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்கள் இணைய தளங்களில் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈராக்கிய இராணுவம் ரிக்கிரி நகரை, போராளிகளிடம் இருந்து மீட்கும் முயற்சியில் பாரிய தாக்குதலை தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகளுக்கு தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடு என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த நாட்டுக்கு தலைவராக அபு பக்கீர் அல்-பகாதி என்பவரையும் அறிவித்தனர்.
ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள். அந்நாட்டின் மொசூல், திக்ரித், கர்பாலா உள்பட பல்வேறு நகரங்களை கைப்பற்றிய அவர்கள் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வந்தனர்.
இந்த நிலையில் ஈராக் பாராளுமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. எனவே போராளிகள் பாக்தாத்தை நெருங்குவதற்குள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும்படியும் போராளிகளின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்கும்படியும் பிரதமர் நூர் அல்-மாலிகி ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும், தூக்கிலிடப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேனின் பிறந்த ஊரான திக்ரித் நகரை மீண்டும் போராளிகளிடம் இருந்து கைப்பற்றும் முயற்சியாக அந்த நகருக்கு போர்க்கப்பல்கள் மூலம் ராணுவம் கூடுதல் படைகளை அனுப்பியது. இந்த நிலையில், திக்ரித் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முகாமிட்டு இருந்த போராளிகளை முற்றுகையிட்டு ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், தீவிரவாதிகள் 70 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் திக்ரித் பல்கலைக்கழகத்தை ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் உச்சியில் ஈராக்கின் தேசிய கொடியையும் ஏற்றினர்.இது தவிர வடக்கு பகுதியில் உள்ள ஜர்ப் அல்-சாகர் நகரில் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 72 போராளிகள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ். சன்னி போராளிகள் தாங்கள் ஏற்கனவே சிரியா நாட்டில் கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம் கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இஸ்லாமிய நாடு என்ற ஒரு நாட்டை உருவாக்கி உள்ளனர்.இதன் தலைவராக அபு பக்கீர் அல்பகாதி என்பவரையும் நியமித்து உள்ளனர். அவரது புகைப்படங்களையும் சமூக வளைத்தளங்களில் இன்று வெளியிட்டனர்.
Post a Comment