காற்சட்டைப் பையில் mobile phone வைத்திருந்தால் இனவிருத்தி ஆற்றல் பாதிப்பு

Wednesday, June 11, 20140 comments


தமது காற்சட்டைப் பையில் கையடக்கத்தொலைபேசிகளை வைத்திருக்கும் ஆண்களுக்கு இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாக பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஒருவரது காற்சட்டைப் பையிலுள்ள கையடக்கத்தொலைபேசிகளிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு அவரது விந்தணுக்களைப் பாதிப்பதால் அவர் தந்தையாகும் வாய்ப்பு குறைவதாக எக்ஸெடர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உலகளாவிய ரீதியில் வயது வந்தவர்களில் அநேகர் சொந்த கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். இந்நிலையில் செல்வந்த நாடுகளைச் சேர்ந்த 14 சதவீதமான ஜோடிகள் கருத்தரிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

1492 ஆண்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட 10 ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

எனினும் இது தொடர்பான உறுதியான முடிவை தெரிவிக்க மேலதிக ஆய்வை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham