தர்க்கா நகர், அளுத்தகம, பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் பாதணி மற்றும் சீருடை என்பவற்றை கொடுத்துதவுமாறு களுத்துறை மாவட்ட எழுத்தாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதால் மாணவர்கள் தமது கற்றல் உபகரணம், பாதணி, சீருடை என்பவற்றை இழந்துள்ளனர்.
இப்பகுதி மாணவர்களின் விபரங்களைத் திரட்டி அவர்களுக்கு உதவுமாறு களுத்துறை மாவட்ட எழுத்தாளர் சங்கச் செயலாளர் எம்.பாஸி ஸூபைர் கேட்டுள்ளார்.
வியன்கல்லை, வெலிப்பன்னை, பலாந்தை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுமாறும் அவர் கேட்டுள்ளார்.
Post a Comment