ஞானசார தேரர் அவ்வாறு செய்யவில்லையாம்!

Friday, June 27, 20140 comments

பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலபொடத்தே ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கலபொடத்தே ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் உரையாற்றியமைக்கான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டியமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை ஏன் கைது செய்யவில்லை என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் அடிப்டையில் நபர்களை கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், கலபொடத்தே ஞானசார தேரர் கடந்த 15ம் திகதி அலுத்கம பிரதேசத்தில் ஆற்றிய கடுமையான உரை யூடியுப்பில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் அவரது உரையை பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham