அரச இரகசியங்களை வெளிப்படுத்தி தவறு செய்திருப்பின் மங்கள சமரவீரவை கைது
செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா
தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர தவறு செய்து விட்டார், தவறு செய்து விட்டார் என வாயால் மென்று
கொண்டிருக்காது அவரை கைது செய்யுமாறு அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவ்வாறே மங்கள சமரவீரவால் தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மங்கள சமரவீர புலனாய்வாளர்கள் மூவரது பெயர்களை
வெளிப்படுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு
பதிலளிக்கும் வகையிலேயே அஜித் பீ. பெரேரா மேற்கண்டவாறு கூறினார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்ததன் பின்னர், மிலேனியம் சிட்டி
காட்டிக் கொடுத்தலைப் போன்றதொரு சம்பவத்தை மீண்டும் ஏற்படுத்த
முயற்சிப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களுடன் குறித்த
மூன்று புலனாய்வாளர்களுக்கும் தொடர்புள்ளதாக மங்கள சமரவீர
தெரிவித்திருந்தார்.
Post a Comment