அரசாங்கத்தின் கைக்கூலியாக உலமா சபை - அசாத் சாலி
Friday, June 20, 20140 comments
அரசாங்கத்தின் கைக்கூலியாகவும் இன்னொரு முகமாகவும் ஜம்மியத்துல் உலமாவும் செயற்படுகின்றது. அது மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்காவிடினும் பரவாயில்லை. நாம் எம் உரிமைக்காக போராடும் போது தடைக்கல்லாக இல்லாமல் இருக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத்சாலி தெரிவித்தார்.
பேருவளை, அளுத்கம ஆகிய இடங்களுக்கு ஜனாதிபதி நேரடியாக விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தாக ஊடகங்களின் வெளிவந்த செய்திகள் முற்றும் முழுதாக பொய்யான ஒன்று. உண்மையில் ஜனாதிபதி அங்குள்ள மாவட்ட செயலகங்களுக்கு மட்டுமே விஜயம் செய்துள்ளார். மாறாக மக்களை சந்திக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;
ஜம்மியத்துல் உலமாவின் கண்டிக்கிளை கண்டியில் ஹர்த்தால் செய்ய வேண்டாம். வர்த்தக நிலையங்களை திறக்குமாறு அறிவித்துள்ளது. இது முஸ்லிம்கள் என்ற வகையில் மிக வெட்கக்கேடான விடயம். ஆயினும் கண்டியில் மக்கள் ஹர்த்தாலை அனுஷ்டித்தனர்.
ஜம்மியத்துல் உலமாமா மக்களின் நலன் கருதி எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. மாறாக அரசாங்கத்தின் கூலியாகவே அரசாங்க முகமூடியை அணிந்து கொண்டு செயற்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment