அளுத்கம -தர்க்காநகர் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நிர்க்கதியடைந்துள்ள மக்களுக்கு வழங்கவென அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நலத் தொண்டு அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட பொருட்களே நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், அக்கரைப்பற்று, இறக்காமம் மற்றும் பொத்துவில் போன்ற பிரதேசங்களிலிருந்து இந்நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
பாதிப்புக்குள்ளான, நிர்க்கதியான மக்களுக்கு வழங்கவென உலர் உணவுப்பொருட்கள், பால் மா வகைககள், மருந்துப்பொருட்கள், அத்தியாவசியப்பொருட்கள், சுகாதார மேம்பாட்டு உபகரணங்கள், சிறுவர்களுக்கு தேவையான பொருட்கள் போன்றன சேகரிக்கப்பட்டு லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது இயல்பு நிலைக்கு திரும்பவும் இவ்வாறான அசம்பாவிதங்கள், நிர்க்கதி நிலையிலிருந்து மீளவும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மக்கள் நோன்பு நோற்று விசேட தூஆ பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
Post a Comment