தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம்: மனம் திறக்­கிறார் கலீல் மௌலவி!

Wednesday, June 11, 20140 comments



ஏ.ஆர்.ஏ. பரீல்

குருவே, தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­மகா விகாரை அபி­வி­ருத்­திக்கு இந்தப் பள்­ளி­வாசல் இருக்கும் இடம் தேவை­யென்றால் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு இந்தப் பள்­ளி­வாசல் காணி அவ­சி­ய­மென்றால் பள்­ளி­வா­சலை அகற்­றிக்­கொள்ள நாம் விருப்பம்.

ஆனால், எமக்கு மாற்­றுக்­காணி பள்­ளி­வா­ச­லுக்கு பின்­னா­லுள்ள 10 ஏக்­கரில் தரப்­பட வேண்டும் என்றேன். அப்­படித் தந்தால் நாங்கள் ரெடி. நீங்கள் பள்­ளி­வா­சலை உடைக்க வேண்டாம். நாங்கள் குர்­ஆனை ஓதி பைத்­துடன் ஒவ்­வொரு தக­ர­மாக கழற்றித் தரு­கிறோம் என்றேன்.

தேரரே, நீங்கள் பள்­ளி­வா­சலை உடைத்தால் அது நாட்­டுக்கு அவ­மானம். பள்­ளி­வா­சலை குருமார் உடைக்­கி­றார்கள் என்­பார்கள். இது சர்­வ­தேச ரீதி­யிலும் நாட்­டுக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும்.

நாங்கள் பள்­ளி­வா­சலைக் கழற்றிக் கொண்டு போனால் நாங்கள் சமா­தா­ன­மாகப் போகிறோம் என்­பார்கள். நாட்­டுக்கும் நற்­பெயர் கிடைக்கும் என்றேன்.
இவ்­வாறு தான் நான் தம்­புள்ளை ரங்­கிரி ரஜ மகா விகாரை அதி­பதி இனா­ம­லுவே சுமங்­கல தேர­ரிடம் கெஞ்­சிக்­கேட்டேன் என்று விடி வெள்­ளி­யிடம் மனம் திறந்தார் மௌலவி கலீல்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் தலை­யிட்­டுள்ள மௌலவி கலீல் தொடர்­பாக அண்­மைக்­கா­ல­மாக ஊட­கங்­களில் பல விமர்­ச­னங்கள் வெளி­யி­டப்­பட்டு வந்­தன.

முஸ்­லிம்­களில் ஒரு சாரார் மூடர்கள் என இனா­ம­லுவே தேரரைச் சந்­தித்து கருத்து வெளி­யிட்­ட­தாக சமூ­கத்­தி­லி­ருந்து அவ­ருக்கு எதி­ராக பலத்த கண்­டனம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.
அவர் தனது முன்­னெ­டுப்­புகள் பற்றி இவ்­வாறு விவ­ரிக்­கிறார்.

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தம்­புள்ளை ஹைரிய்யா ஜும்ஆப் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­னதை அடுத்து சில நாட்­களில் தம்­புள்ளை பள்­ளி­வா­சலின் இருப்பு பற்றி ஜனா­தி­ப­தி­யுடன் 1 ½ மணித்­தி­யா­லங்கள் கதைத்தேன். ஜனா­தி­பதி எனது விளக்­கங்­களை கவ­ன­மாக செவி­ம­டுத்தார். பள்­ளி­வா­சலை உடைப்­ப­தற்கோ அல்­லது இட­மாற்­று­வ­தற்கோ நான் விரும்­ப­வில்லை என்றார் ஜனா­தி­பதி. இனா­ம­லுவே தேரரைச் சந்­தித்து உங்கள் நிலை­மை­களை விளக்கி சாதித்துக் கொள்­ளுங்கள் என்றார். இத­னை­ய­டுத்து இனா­ம­லுவே தேரரைச் சந்­திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்­பட்­டது.

கடந்த மே மாதம் 8 ஆம் திகதி இனா­ம­லுவே தேரர் முன்­னின்று பாதை அபி­வி­ருத்திப் பணியை முன்­னெ­டுத்தார். பள்­ளி­வா­சலை உள்­வாங்கும் வகையில் அந்தப் பாதை அபி­வி­ருத்தி அமைந்­தி­ருந்­தது.

பாதை அபி­வி­ருத்திப் பணியை தேரர் முன்­னெ­டுத்த போது ஹைரிய்யா பள்­ளி­வாசல் நிர்­வாக சபையைச் சேர்ந்த மூவர் என்னைத் தொடர்­பு­கொண்­டார்கள். என்­னிடம் கெஞ்­சி­னார்கள். மௌலவி பள்­ளி­வா­சலை காப்­பாற்­றித்­தா­ருங்கள் என்­றார்கள். அமைச்­சர்மார் இருந்தும் பல­னில்லை. ஒன்றும் நடக்­க­வில்லை. நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்­றார்கள். பள்­ளி­வசால் ஹஸ­ரத்தும் என்னை தொடர்பு கொண்டு கெஞ்­சினார்.

பள்­ளி­வாசல் மரத்தைக் கழற்றப் போகி­றார்கள் அமைச்சர் ஜனக பண்­டார தென்­னகோன் இருந்தும் பிர­யோ­ச­ன­மில்லை. இனா­ம­லுவே தான் நினைத்­ததைச் செய்­கிறார். நீங்கள் இந்த விட­யத்தில் உட­ன­டி­யாக தலை­யி­டுங்கள் என்­றார்கள்.

நான் உடனே மத விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான விஷேட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேன­நா­யக்­கவை தொடர்பு கொண்டேன். அவ­ரிடம் பாதை அபி­வி­ருத்திப் பணியை நிறுத்தி பள்­ளி­வா­சலை பாது­காக்­கும்­படி வேண்­டினேன்.

அவர் பள்­ளி­வாசல் லெட் (கழி­வறை) உடையும் என்றார். லெட் இல்­லாமல் வாழவே முடி­யாது என்றேன். இது அவ­மானம். அசௌ­க­ரியம். லெட் உடைப்­பதை உடன் நிறுத்­துங்கள் என்று அநுர சேன­நா­யக்­க­விடம் வேண்­டினேன்.
நான் அநுர சேன­நா­யக்­க­விடம் வேண்­டுகோள் விடுத்து 10 நிமி­டத்தில் அவர் பாதை அபி­வி­ருத்திப் பணியை நிறுத்­தினார். அன்று ஜனா­தி­ப­தி­யுடன் ½ மணித்­தி­யாலம் பேசினேன். எதற்கு பள்­ளியை உடைக்க வேண்டும். உடைக்­கக்­கூ­டாது என்றேன்.

மே மாதம் 9 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பள்­ளி­வாசல் நிர்­வாக சபை என்னை ஜும்ஆப் பிர­சங்கம் நடத்த அழைத்­தது. அங்கு சென்று சிங்­க­ளத்தில் ஜும்ஆப் பிர­சங்­கத்தை நிகழ்த்­தினேன். எனது பிர­சங்கம் டேப்பில் பதிவு செய்­யப்­பட்டு இனா­ம­லுவே தேர­ரிடம் கொடுக்­கப்­பட்­டது.

டேப்பை செவி­ம­டுத்த தேரர் இவ­ருக்கு அறி­வுள்­ளது மார்க்­கப்­பற்­றுடன் தேசப்­பற்றும் இருக்­கி­றது எனத் தெரி­வித்தார்.

கடந்த 11 ஆம் திகதி நான் இனா­ம­லுவே தேரரைச் சந்­திக்க தம்­புள்ளை ரங்­கிரி விகா­ரைக்குச் சென்றேன். சொல்­லி­விட்டுப் போனேன். தேரரின் நாடியைப் பிடித்து பேசி­விட்டு வரு­கிறேன் என்று பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் சில­ரிடம் கூறிச் சென்றேன்.

அங்கு சென்று தேர­ரிடம் ஏன் பள்­ளி­வா­சலை உடைக்கப் போகி­றீர்கள்? என்று கேட்டேன்.

அவர் இவ்­வாறு பதில் சொன்னார். நான் 1955 ஆம் ஆண்டில் துற­வி­யானேன். அப்­போது எனது வயது 7. 1960ஆம் ஆண்டு உது­மா­லெப்பை இப்­ராஹிம் என்­றொ­ருவர் காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து வந்தார். அவர் ஒரு பொட்­டனி வியா­பாரி. பென்சி ஐட்டம் விற்­பனை செய்தார். பன்­சலை காணி­யிலே வியா­பா­ரத்தை நடத்­தினார்.

பன்­சலை கேட்­ட­டியில் தான் படுத்துத் தூங்­குவார். அவர் மார்க்­கப்­பற்­றுள்­ளவர். ஒரு நாள் இப்­ராஹிம் இங்கே வா என்று அவரைக் கூப்­பிட்டேன்.
நான்கு தடிகள் நட்டு ஒரு தற்­கா­லிக கடை நடத்த இடம் கொடுத்தேன். இப்­ராஹிம் இறந்­ததன் பின்பு அந்த சிறிய கடை கூடா­ர­மா­னது. அவ­ரது மகன் கடையை நடத்­தினார். ஒருநாள் நான் அங்கு சென்­ற­போது அதிர்ச்­சிக்­குள்­ளானேன். கடையின் பின்னால் பள்­ளி­வாசல் உரு­வா­கி­யி­ருந்­தது.
இது வேண்டாம் என்றேன். அவர்கள் கேட்­க­வில்லை. அவர்கள் பள்­ளி­வா­சலை செய்­தார்கள். நகர சபையின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை. வேறு அரச நிறு­வ­னங்­களின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை. பதி­வுகள் இல்லை. இதுதான் கூடா­ரத்தின் வர­லாறு.

உங்­க­ளிடம் பிரத்­தி­யேக வர­லாறு இருந்தால் என்­னிடம் கொண்டு வந்து காட்­டுங்கள் என்று தேரர் என்னைப் பார்த்து சவால்­விட்டார்.
இப்­போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இனா­ம­லுவே தேர­ரிடம் வின­வினேன். ஒன்றும் செய்ய முடி­யாது என்றார்.

தம்­புள்ளை ரங்­கிரி ரஜ மகா விகா­ரைக்குச் சொந்­த­மான காணி 1982 ஆம் ஆண்டு கெசற் பண்­ணப்­பட்­டுள்­ளது. புனித பூமி­யாக உறு­தி­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதற்­கான வரை­ப­டமும் என்­னிடம் உள்­ளது. 1982 ஆம் ஆண்டு கசெற் பண்­ணப்­பட்­டதும் அன்று யுத்த சூழல் நில­வி­யதால் அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு பெற்­றுக்­கொள்ள முடி­யாமற் போனது.

யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்டு தற்­போது சமா­தான சூழல் நில­வு­வதால் கடந்த பெப்­ர­வரி மாதம் புனித நகர் அபி­வி­ருத்தி பணி­க­ளுக்கு அர­சாங்கம் 550 மில்­லியன் ரூபா ஒதுக்­கி­யுள்­ளது. இந்த நிதி­யினால் நான் அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுக்­கின்றேன். பாதை அக­ல­மாக வெட்­டப்­ப­டு­கின்­றது. ஆனால், அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுக்க பள்­ளி­வாசல் தடை­யாக இருக்­கி­றது என்றார்.

இந்த விப­ரங்­களை நான் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யிடம் தெரி­வித்தேன். பள்­ளி­வா­சலை உடைப்­பது தான் தேரரின் முடிவு என்­பதை விளக்­கினேன். புனித பிர­தே­ச­மாக பள்­ளி­வாசல் காணி உட்­பட்ட பிர­தேசம் கெசற் பண்­ணப்­ப­டு­வ­தற்கு முன்பு முஸ்லிம் அமைச்­சர்கள் பேசி­யி­ருக்க வேண்டும். எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருக்க வேண்டும். நியா­யங்­களை எடுத்து விளக்­கி­யி­ருக்க வேண்டும். ஆனால் ஒரு­வரும் வாய் திறக்­க­வில்லை.

பின்பு பள்­ளி­வாசல் நிர்­வாகம் பின்­னா­லுள்ள டாக்டர் புத்­த­தா­ச­வினால் அர­சுக்கு வழங்­கப்­பட்ட 10 ஏக்கர் காணியில் பள்­ளிக்கு இடம்­பெற்றுத் தாருங்கள் என்­றார்கள். அன்று நான் உம்­றா­வுக்கு சென்ற நேரம். மக்­கா­வி­லி­ருந்து கூட இனா­ம­லுவே தேர­ருடன் பேசினேன். பள்­ளி­வா­ச­லுக்குப் பின்னால் காணியை பெற்­றுக்­கொள்ள உத­வுங்கள் என்று கெஞ்­சினேன்.

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி வை.எம்.எம்.ஏ.இயக்கம் அதன் தலை­மை­ய­கத்தில் கூட்­ட­மொன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. கூட்­டத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை வக்பு சபை பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டார்கள். அக்­கூட்­டத்தில் இனா­ம­லுவே தேரரின் நிலைப்­பாட்­டினை நான் விளக்­கினேன். பள்­ளி­வாசல் உடைக்­கப்­படும் என்­ப­தையும் தெரி­வித்தேன்.

பள்­ளி­வா­ச­லுக்கு பின்­பு­ற­மாக உள்ள காணியை டாக்டர் புத்­த­தாச பன்­ச­லைக்கு எழுதித் தந்­துள்­ள­தாக இனா­ம­லுவே கூறு­கிறார். இந்தக் காணியில் ஒரு பகு­தி­யியை கேட்டு பெற்­றுத்­தர முயற்­சிக்­கிறேன் என்றும் கூட்­டத்தில் தெரி­வித்தேன்.

இத­னை­ய­டுத்துத் தான் கடந்த முதலாம் திகதி மீண்டும் ரங்­கிரி ரஜ­மகா விகா­ரைக்குச் சென்று தேரரைச் சந்­தித்து பள்­ளி­வா­சலை நாம் அகற்­றிக்­கொள்ள விருப்பம். ஆனால், பள்­ளி­வா­ச­லுக்கு பின்­பு­ற­மாக உள்ள பகு­தியில் மாற்­றுக்­காணி தரப்­பட வேண்டும் என்று அவ­ரிடம் வலி­யு­றுத்­தினேன்.

ஆனால், தேரரின் மனோ­பாவம் வேறு வித­மாக இருந்­தது. மாற்றுக் காணி­யொன்று தந்து தான் இந்தப் பிரச்­சி­னையை முடித்துக் கொள்­வ­தற்கு எனக்கு எந்தத் தேவை­யு­மில்லை. உங்­க­ளுக்­குத்தான் காணி தேவை.

காணி­யொன்று தேடிக் கொள்­ளுங்கள். நான் புதிய பள்­ளி­வா­ச­லுக்கு அடிக்கல் நாட்டித் தரு­கிறேன். பன்­ச­லைக்கு சொந்­த­மாக உள்ள புனித பூமியின் ஒரு துண்­டு­கூட தர­மாட்டேன்.

புனித பூமியின் எல்­லை­க­ளாக மிரிஸ்­கோ­னியா பாலம். குரு­நாகல் பாதையில் தம்­பு­ளு­ஓயா பாலம். மாத்­தளை பாதையில் தம்­பு­ளு­ஓயா பாலம். கந்­தமை எரவ்­வல பாலச் சந்தி என்­பன அமைந்­துள்­ளன. இந்த எல்­லைக்கு வெளியே காணி தேடிக்­கொள்­ளுங்கள் என்றார்.

தேரரே நீங்கள் இப்­படிச் சொன்னால் எப்­படி? நாங்கள் தம்­பிமார் நீங்கள் அண்­ணன்மார் எங்­களை விரட்டி விடா­தீர்கள். பள்­ளி­வாசல் நிர்­வாகம் உங்கள் உத­வி­யையே எதிர்­பார்க்­கி­றது என்றேன்.

புனித பூமியில் எந்த சம­யத்­தி­னதும் கட்­டிடம் இருக்க விட­மாட்டேன். புதி­தாக கட்­டவும் விட­மாட்டேன் என்றார்.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் சில­ரது அனு­ம­தி­யு­டனே நான் தேரரைச் சந்­தித்தேன். நான் நிர்­வா­கத்­துக்கு அறி­விக்­காது தேரரைச் சந்­தித்­தது என்று குறை­கூ­று­வது தவ­றாகும்.

தேரரே நீங்கள் எல்­லை­களைக் குறிப்­பிட்டு அதற்கு அப்பால் காணி தேடிக் கொள்­ளுங்கள் என்­கி­றீர்கள். நான் சமூ­கத்­திடம் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திடம் மசூரா பண்­ணி­விட்டு வரு­கிறேன் என்று விடை­பெற்றேன்.

கடந்த திங்­கட்­கி­ழமை மாலை 4 மணிக்கு நான் ஜனாதிபதியுடன் அரை மணிநேரம் பேசினேன். தேரருடனான எனது கலந்துரையாடலை ஜனாதிபதியிடம் விளக்கினேன். பள்ளிவாசலுக்கு புனித பூமிக்கு வெளியே வேறிடம் பார்த்துக் கொள்ளும்படி தேரர் உறுதியாக இருக்கிறார் என்றேன்.
ஜனாதிபதி இது விடயமாக பிரதமரைச் சந்திக்கும் படியும் பிரதமருக்கு அவர் தொலைபேசியில் விபரம் தெரிவிப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
நான் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுரசேனநாயக்கவுடனும் பேசினேன். பொலிஸ் மா அதிபரின் செயலாளருடனும் பேசினேன்.

பிரதமருடன் கலந்துரையாடும் பொறுப்பு வை.எம்.எம்.ஏ. தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இனாமலுவே தேரர் மறுமுறை இங்கு வருவதென்றால் நல்ல முடிவுடன் வாருங்கள். இல்லாவிட்டால் வர வேண்டாம் என்று என்னிடம் தெரிவித்துள்ளார்.

இது தான் நடந்த கதை. என்னை வீணாக குறைகூறுவதில் அர்த்தமில்லை. சமூகத்துக்காக அல்லாஹ்வின் பாதையில் எனது பணிகளை நேர்மையாகவே முன்னெடுத்துள்ளேன் என்றார்.

இது தொடர்பில்  வை.எம்.எம்.ஏ.யின் தலைவர் கே.என்.எம். டீன் தனது கருத்தை பின்வருமாறு தெரிவித்தார்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பாக கலீல் மௌலவி நேர­டி­யாக ரங்­கிரி ரஜமகா விகா­ரைக்குச் சென்று இனா­ம­லுவே தேரரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். அவரின் துணிச்சல் வை.எம்.எம்.ஏ.யைக் கவர்ந்­தது. இத­னை­ய­டுத்து நாம் கலீல் மௌல­வியைத் தொடர்பு கொண்டோம். அவர் மூலம் தம்­புள்ளை இனா­ம­லுவே தேர­ருக்கும் எமக்­கு­மி­டையில் ஒரு நல்­லு­ற­வினை ஏற்­ப­டுத்திக் கொள்ள முயற்­சித்தோம்.

வை.எம்.எம்.ஏ. தலை­மை­ய­கத்­துக்கு தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபை, அகில இலங்கை ஜம் இய்­யதுல் உலமா சபை, முஸ்லிம் இயக்­கங்­களின் பிர­தி­நி­திகள், கலீல் மௌலவி என்­போரை அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம்.

பள்ளி நிர்­வாக சபையைச் சேர்ந்த 8 உறுப்­பி­னர்­களும் கலந்து கொண்­டார்கள். சுமார் 25 பேர் கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்­டார்கள்.

அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு நாங்கள் தடை­யாக இருக்க விரும்­பவில்லை. பெரும்­பான்­மை­யி­ன­ரிடம் நல்­லு­ற­வாக வாழ விரும்­பு­கிறோம். எமக்கு வச­தி­யான இடம் வழங்­கப்­ப­டு­மென்றால் அவ்­வி­டத்­தி­லி­ருந்து பள்­ளி­வா­சலை இடம்­மாற்­று­வது பற்றி சிந்­திப்போம் என்று நிர்­வாக சபை கூறி­யது. ஆரம்­பத்தில் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அசை­வ­தில்லை என்­றி­ருந்­த­வர்கள் தமது நிலைப்­பாட்­டினை தளர்த்­தி­யி­ருந்­தார்கள்.

இந்த நிலைப்­பாட்­டினைத் தெரி­விப்­ப­தற்­கா­கவே கலீல் மௌல­வியின் தலை­மையில் இரண்­டா­வது விஜயம் ரங்­கிரி விகா­ரைக்கு மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்தக் குழுவில் மௌல­வி­யுடன் வை.எம்.எம்.ஏ. வைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி டாக்டர் என்.எம்.எம். இக்பால் மற்றும் மொஹமட் நியாஸ், மொஹமட் பைசல் ஆகியோர் அடங்­கி­யி­ருந்­தனர்.

கலீல் மௌல­வியின் இரண்­டா­வது விஜ­யத்­தி­னை­ய­டுத்து தம்­புள்ளை இனா­ம­லுவே தேரரின் நிலைப்­பாட்டை ஜனா­தி­ப­திக்கு மௌலவி விளக்­கி­யி­ருந்தார். ஜனா­தி­பதி பிர­த­மரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­மாறு எம்மை வேண்­டி­யி­ருக்­கிறார். நான் விரைவில் பிர­த­மரைச் சந்­தித்துப் பேச­வுள்ளேன். பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தற்­போது ஆவ­ணங்­களைத் தயா­ரித்துக் கொண்­டி­ருக்­கிறோம்.
இனா­ம­லுவே தேரர் அன்­றி­ருந்த கடி­ன­மான நிலைப்­பாட்டில் தற்­போது இல்லை. அதனால் அவ­ருடன் மேலும் பல ­கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளோம்.

சிங்­கள முஸ்லிம் சமா­தா­னத்தை தம்­புள்­ளை­யி­லி­ருந்து காண்­பிப்போம் என்றும் தேரர் கூறி­யுள்ளார்.

தம்­புள்­ளையில் முஸ்லிம் சிங்­கள உறவு நிலைக்க வேண்டும். சக வாழ்வு உறு­திப்­ப­டுத்­த­பட வேண்டும். இதுவே வை.எம்.எம்.ஏ. யின் நிலைப்­பாடு. இந்­நாட்டில் முஸ்­லிம்­களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும்.

முஸ்லிம்கள் வாழும் இடத்தில் பள்ளிவாசல் அமைய வேண்டும். அது பிரச்சினைகள் இல்லாத இடமாகவும் இருக்க வேண்டும் என்பதை பிரதமரிடம் தெளிவாக விளக்குவோம் என்றார்.  (நன்றி விடிவெள்ளி)

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham