இஸ்லாமிய தீனியாத் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

Wednesday, June 11, 20140 comments


இஸ்லாமிய தீனியாத் (தர்மாச்சார்ய) சான்றிதழ் பரீட்சைக்கு இஸ்லாமிய பரீட்சைத்திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அரச பாடசாலைகளில் 13ஆம் தரத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களும், அஹதிய்யாப்பாடசாலை ஆசிரியர்களும் அரபுக்கல்லூரி மாணவர்களும் மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிவாரிப்பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது எனவும் அவர்களது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள அஹதிய்யாப்பாடசாலை அல்லது அரபுக்கல்லூரி மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 13ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் இலங்கை பரீட்சைத்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க முடியும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham