ஊவாவில் ஐ.தே.க. வை ஆதரிப்பதே முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் - அமீர்

Wednesday, June 11, 20140 comments


அரசாங்கத்திற்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளும் பள்ளிவாசல்களை உடைக்கவே பயன்படும். எனவே முஸ்லிம்களை காப்பாற்றிய ஐக்கிய தேசிய கட்சியினை ஆதரிப்பதே எமக்கு நன்மை பயக்கும் என முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அமீர் தெரிவித்தார்.

பண்டாரவளை கிரிந்தி எல்லை பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் இம் மாகாணத்திற்கு வந்து முஸ்லிம்களை குழப்பி சுயட்சைக்குழுவொன்றினை அமைத்து போட்டியிடுமாறு கோரியுள்ளனர்.

இவர்கள் தனித்தனிக் கட்சிகளை உருவாக்க போட்டியிட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் இவ்வேளை ஊவா மாகாண முஸ்லிம்களை ஏன் சுயேட்சையாக போட்டியிட அழைப்பு விடுக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பதால் என்ன பலன் உள்ளது? இன்று இலங்கையில் நாலா பாகத்திலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் எரியூட்டப்படுகின்றது. இவற்றுக்கு யார் பொறுப்பு கூறுவது?

எனவே இவர்கள் உடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க ஐ.தே.க. இணைய வேண்டும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham